நாட்டை விட ஐபிஎல் பெருசா போச்சா? வாயை விட்டு மாட்டிய டேவோன் கான்வே – நியூஸி ரசிகர்கள் எதிர்ப்பால் யூடர்ன் கருத்து

Devon Conway
- Advertisement -

பரபரப்பான போட்டிகளுடன் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றின் வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்த சென்னை இந்த வருடம் தோனி தலைமையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு மாபெரும் ஃபைனலில் குஜராத்தை அதன் கோட்டையான அகமதாபாத்தில் எதிர்கொண்டது. மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் எடுத்த அதிரடியில் குஜராத் 215 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

Devon Conway

- Advertisement -

அதை தொடர்ந்து மழை வந்ததால் 15 ஓவரில் 171 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, சிவம் துபே 32*, ரகானே 27, ராயுடு 19 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர். கடைசியில் மோகித் சர்மா முழுமூச்சுடன் போராடியும் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரும் பவுண்டரியும் அடித்த ஜடேஜா சூப்பர் பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.

சிக்கிய கான்வே:
இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களும் முக்கிய பங்காற்றியிருந்தாலும் 47 (25) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்த டேவோன் கான்வே மாபெரும் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்றார். நியூசிலாந்தை சேர்ந்த அவர் கடந்த வருடம் முதல் முறையாக சென்னைக்கு வாங்கப்பட்டு 7 போட்டிகளில் 252 ரன்கள் எடுத்தார். அதை விட இந்த வருடம் 15 இன்னிங்ஸில் 672 ரன்களை விளாசி அதிக ரன்கள் எடுத்த சென்னை வீரராக சாதனை படைத்த அவர் 5வது கோப்பையை வெல்ல பேட்டிங் துறையில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

Devon Conway 1

அத்துடன் ருதுராஜுடன் 4 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் ஐபிஎல் தொடரில் அதிக முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடி என்ற சாதனையும் படைத்தார். அப்படி சென்னையின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் போட்டி முடிந்ததும் இது தம்முடைய கேரியரின் மிகச்சிறந்த வெற்றி என மகிழ்ச்சியாக பேசியது பின்வருமாறு. “இது என்னுடைய கேரியரின் மிகச் சிறந்த வெற்றி. ஐபிஎல் ஃபைனல் அதை விட பெரிதாக இருக்க முடியாது. இதற்கான பெரும்பாலான பாராட்டுக்கள் இடது கை பேட்ஸ்மேன் ஜாம்பவானான மைக் ஹசியை சேரும். அவரது இடத்தில் சென்னை அணியில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

ஆனால் அந்த கருத்தால் கோபமடைந்த நியூசிலாந்து ரசிகர்கள் பணத்துக்காக விளையாடும் ஐபிஎல் தொடரில் பெற்ற இந்த வெற்றி தான் உங்களுடைய கேரியரின் மிகப்பெரியதா? 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வெற்றி கிடையாதா? என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். அவர்கள் விமர்சித்ததிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் என்ன தான் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் நாட்டுக்காக உலகக் கோப்பை வெல்வதே ஒரு வீரரின் மிகப்பெரிய சாதனையாகும்.

conway 1

அந்த வகையில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்து 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் வென்ற கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் 54, 19 ரன்களை குவித்த டேவோன் கான்வே வெற்றியில் முக்கிய பங்காற்றி சாம்பியன் பட்டம் வென்றது அவருடைய கேரியரின் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம். இருப்பினும் ஒரு லட்சம் ரசிகர்கள் இருந்த மைதானத்தில் கடைசி பந்தில் போராடி த்ரில் வெற்றி பெற்ற ஆனந்தத்தில் அப்படி சொன்ன கான்வே நியூசிலாந்து ரசிகர்களின் எதிர்ப்பால் அந்தக் கருத்தை தற்போது திரும்பப் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:அவரோட இந்திய கேரியரை முடிச்சதே நீங்க தான், விராட் – ரவி சாஸ்திரியை மறைமுகமாக விமர்சித்த கும்ப்ளே, காரணம் இதோ

இது பற்றி பிரபல நியூசிலாந்து இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அது என்னுடைய டி20 கேரியரின் சிறந்த வெற்றி என்று நினைக்கிறேன். இருப்பினும் ஒட்டுமொத்தமாக என்னுடைய கேரியரின் சிறந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனாலும் எனது டி20 கேரியரில் அது மிகப்பெரிய சாதனையாகும். அவை அனைத்தையும் விட நியூசிலாந்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வென்றதே மிகவும் ஸ்பெஷலாகும்” என்று கூறினார்.

Advertisement