அவரோட இந்திய கேரியரை முடிச்சதே நீங்க தான், விராட் – ரவி சாஸ்திரியை மறைமுகமாக விமர்சித்த கும்ப்ளே, காரணம் இதோ

Anil Kumble
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2 மாதங்களாக பரபரப்பான போட்டிகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்து நிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் குஜராத்தை அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணியான மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முழு மூச்சுடன் போராடிய குஜராத்துக்கு மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரும் பவுண்டரியும் அடித்த ஜடேஜா திரில் சென்னைக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

Rayudu

- Advertisement -

அந்த போட்டியில் மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, சிவம் துபே 32*, ரகானே 27 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். அதே போல சிவம் துபே தடுமாறிக் கொண்டிருந்த போது களமிறங்கிய அம்பத்தி ராயுடு 13வது ஓவரில் மோஹித் சர்மாவின் முதல் 3 பந்துகளில் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளால் அழுத்தத்தை உடைத்து 19 (8) ரன்களை 237.50 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

கும்ப்ளே விமர்சனம்:
அந்த வகையில் தம்முடைய கடைசி போட்டியில் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்திய அவர் ஏற்கனவே அறிவித்தது போல் வெற்றியுடன் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். மேலும் மொத்தமாக 6 கோப்பைகளுடன் (மும்பைக்காக 2013, 2015, 2017 – சென்னைக்காக 2018, 2021, 2023) ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனை சமன் செய்த அவர் ஜாம்பவானாகவே விடை பெற்றார். அதனாலேயே வெற்றிக் கோப்பையை முதலில் அவர் கையில் கொடுத்து கேப்டன் தோனி மரியாதை செய்தார்.

rayudu

அந்தளவுக்கு திறமை வாய்ந்த அவர் 2013இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் 2018 இல் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி இங்கிலாந்தில் நடைபெறவிருந்த 2019 உலக கோப்பையில் விளையாட தகுதியானவராக காத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் 4வது இடத்தில் விளையாடுபவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறையிலும் அசத்தும் முப்பரிமான வீரராக இருக்க வேண்டுமென கருதிய கேப்டன் விராட் கோலி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கோரிக்கைக்கேற்ப எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தமிழகத்தின் விஜய் சங்கரை தேர்வு செய்தது.

- Advertisement -

அத்துடன் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ராயுடு முதலாவதாக இடம் பெற்றிருந்தார். அப்படி தமக்கு இடம் கிடைக்காததால் 2019 உலகக் கோப்பையை பார்க்க 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளதாக ராயுடு வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டார். அதை வன்மமாக எடுத்துக்கொண்ட தேர்வுக்குழு 2019 உலகக்கோப்பையில் ஓரிரு போட்டிகளில் விளையாடி சுமாராக செயல்பட்ட விஜய் சங்கர் காயத்தால் வெளியேறியதும் ஏற்கனவே அறிவித்தது போல் ரிசர்வ் பட்டியலில் முதலாவதாக இருந்த ராயுடுவை தேர்வு செய்யாமல் மயங் அகர்வாலை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது.

Virat-Kohli-Anil-Kumble

அத்துடன் உலகக்கோப்பை முடிந்தும் வாய்ப்பு கொடுக்காமல் தேர்வுக்குழு கழற்றி விட்டதால் மனமுடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ராயுடுவின் சர்வதேச கேரியர் பாழாவதற்கு 2019 உலகக்கோப்பையில் முப்பரிமாண வீரர் தேவை என்ற விராட் – சாஸ்திரி தலைமை கூட்டணியின் தவறான முடிவே காரணம் என்று முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:சி.எஸ்.கே அணி 5வது சாம்பியன் பட்டத்தை வென்றதும் ருதுராஜ் கெய்க்வாட் ஜெர்சியில் செய்த இந்த மாற்றத்தை – கவனித்தீர்களா?

“ராயுடு 2019 உலக கோப்பையில் நிச்சயமாக விளையாடியிருக்க வேண்டும். கண்டிப்பாக அதில் யாருக்கும் எந்த சந்தேகமுமில்லை. சொல்லப்போனால் ஆசையை காட்டும் வகையில் அந்த உலகக் கோப்பைக்கு 6 மாதங்கள் முன்பாக நீங்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தீர்கள். அதில் சிறப்பாக செயல்பட்டும் கடைசியில் அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை அணியில் திடீரென அவரது பெயர் காணவில்லை. அது மிகப்பெரிய சொதப்பலான தவறு. அது அனைவருக்குமே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது” என்று கூறினார். அப்படி சர்வதேச கேரியர் வன்மத்தால் வீழ்த்தப்பட்டாலும் ஐபிஎல் ஜாம்பவானாக ஓய்வு பெற்ற ராயுடு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

Advertisement