சொதப்பலுக்கு காரணம் மட்டும் சொல்லாதீங்க, புவிக்கு பதில் அவர கொண்டுவாங்க – முன்னாள் வீரர் கருத்து

Rohit Sharma Bhuvneswar Kumar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் போராடி 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை முத்தமிட்டு தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்த இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசியாக இந்தியா களமிறங்கும் இத்தொடர் சமீபத்திய ஆசிய கோப்பை போன்ற தோல்விகளில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கு கடைசி வாய்ப்பாக பார்க்கப்படும் நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

- Advertisement -

ஆனால் சுமாராக செயல்பட்டு வரும் புவனேஸ்வர் குமாருக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது நிறைய ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடித்துள்ள அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் கடைசிகட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை பரிசளித்தது. குறிப்பாக 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கி விமர்சனங்களை சந்தித்த அவர் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரின் மொஹாலி போட்டியிலும் அதே 19வது ஓவரில் எதிரணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது 18 ரன்களை வழங்கி வெற்றியை தாரை வார்த்தார்.

பணிச்சுமை காரணமா:
அதனால் 2வது போட்டியில் நீக்கப்பட்ட அவர் 3வது போட்டியிலும் கொஞ்சமும் முன்னேறாமல் ரன்களை வாரி வழங்கியதால் இவரை வைத்துக்கொண்டு உலகக்கோப்பையை எப்படி வெல்லப் போகிறோம் என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு ஆதரவு கொடுப்போம் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவித்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசியாக நடைபெறும் இத்தொடரில் ஒன்று அவர் விளையாட வேண்டும் அல்லது ரசிகர்களின் கோரிக்கைப்படி அதிரடியாக நீக்கப்பட வேண்டும்.

Bhuvneshwar Kumar

மாறாக இரண்டுமே அல்லாமல் அவர் என்னமோ அதிகப்படியான போட்டிகளில் விளையாடியதால் அதிகப்படியான பணிச்சுமையை சந்தித்தது போல் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு ஓய்வு கொடுத்துள்ளது. ஆனால் சமீப காலங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவதால் பணிச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அதனால் தடுமாறும் அவருக்கு பதிலாக முகமது சமி போன்ற பலமான பவுலருக்கு இந்தியா வாய்ப்பு கொடுக்க வேண்டுமென தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “புவனேஸ்வர் குமாருடன் இது மிகவும் எளிமையான பதில் அல்ல. ஆனால் நீங்கள் எளிமையான பதில்களில் ஒன்றை கொடுக்க வேண்டும். மேலும் அவர் பாதி வெந்தவர் போல் காட்சியளிப்பதற்கு அதிகப்படியான கிரிக்கெட் விளையாடுவது ஒரு முக்கிய காரணமாகிறது. ஏனெனில் இந்த தொடரில் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார்”

Sanjay

“இருப்பினும் கடந்த பல வருடங்களாக நான் பார்த்த புவனேஸ்வர் குமார் எப்போதும் பலமானவர் கிடையாது. அவர் எப்போதும் அதிகப்படியான பணிச்சுமையை ஏற்றுக்கொள்வதில்லை. அதுபோக அவர் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார். ஆனாலும் இதுபோன்ற ஓய்வுகளை எடுத்து திரும்பும் போது அவர் முதல் சில போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் சிறப்பாக செயல்படுவதை நீங்கள் கவனிக்க முடியும். எனவே பணிச்சுமை காரணமாக தற்சமயத்தில் புவனேஸ்வர் குமார் தடுமாறுகிறார் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்”

- Advertisement -

“ஹர்ஷல் படேலும் குறிப்பிட்டளவு மட்டுமே வேகத்துடன் வீசக்கூடியவர். அதனால் இந்தியா தரமான 3வது வேகப்பந்துவீச்சாளரை பார்க்க வேண்டும். அந்த இடத்தில் நான் முகமது சமியை வைத்திருக்கிறேன்” என்று கூறினார். அதாவது விராட் கோலியை போல் 3 வகையான கிரிக்கெட்டில் விளையாடாத புவனேஸ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினாலும் சோர்வடைந்து விடுகிறார் என்று தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒருசில போட்டிகள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் திரும்பும் போது மீண்டும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகிறார்.

இதையும் படிங்க : IND vs RSA : டாஸ் வென்ற இந்திய இந்திய அணி முதலில் பவுலிங். அணியில் 2 மாற்றம் – விவரம் இதோ

ஆனால் மீண்டும் குறிப்பிட்ட சில போட்டிகளுக்கு பின் சோர்ந்து போகக் கூடியவராக செயல்பட்டு வரும் புவனேஸ்வருக்கு பதில் ஷமி போன்ற வலுவான வேகப்பந்து வீச்சாளர் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில் ஹர்ஷல் படேலும் புவனேஸ்வர் போலவே குறைவான வேகத்துடன் ஸ்விங்கை மட்டும் நம்பியிருக்கும் பவுலராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement