IND vs RSA : டாஸ் வென்ற இந்திய இந்திய அணி முதலில் பவுலிங். அணியில் 2 மாற்றம் – விவரம் இதோ

INDvsRSA-Toss
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று திருவனந்தபுரம் நகரில் துவங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் தற்போது இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Temba-Bavuma

- Advertisement -

அதன்படி சற்றுமுன் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது வழக்கம் போலவே முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

அதன்படி ஏற்கனவே இந்த தொடரில் புவனேஸ்வர் குமார் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் ஓய்வினை பெற்றுள்ளதால் ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதுதவிர்த்து இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பும்ரா மற்றும் சாகல் ஆகியோர் இந்த முதல் போட்டியில் இடம் பெறவில்லை.

Arshdeep Singh

அவர்களுக்கு பதிலாக தீபக் சாகர் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெறுவதாக ரோகித் சர்மா தெரிவித்தார். அதிலும் குறிப்பாக பும்ராவிற்கு இன்று காலை பயிற்சியின்போது ஏற்பட்ட சுலுக்கு காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை என்றும் அடுத்தடுத்த போட்டியில் விளையாடுவார் என்றும் ரோகித் சர்மா அறிவித்தார்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த தொடரே இரு அணிகளுக்கும் கடைசி டி20 தொடர் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs RSA : இந்தியாவில் விளையாடும்போது எங்களுக்கு இருக்குற ஒரே பிரச்சனை இதுதான் – தெம்பா பவுமா பேட்டி

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) தினேஷ் கார்த்திக், 6) ரிஷப் பண்ட், 7) அக்சர் படேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) ஹர்ஷல் படேல், 10) தீபக் சாஹர், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement