IND vs RSA : இந்தியாவில் விளையாடும்போது எங்களுக்கு இருக்குற ஒரே பிரச்சனை இதுதான் – தெம்பா பவுமா பேட்டி

Bavuma
- Advertisement -

தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதும் கடைசி தொடர் இது என்பதனால் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளுமே கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Temba-Bavuma

- Advertisement -

அதன் காரணமாக இந்த டி20 தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது முதலாவது டி20 போட்டியில் களமிறங்க தயாராக உள்ளது.

இவ்வேளையில் அந்த அணியின் கேப்டனான தெம்பா பவுமா இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக இருக்கும் சவால் குறித்து தனது வெளிப்படையான கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : இந்திய மண்ணில் நாங்கள் விளையாடும் போது எப்போதுமே புதிய பந்தினை எதிர்கொள்வதில் ஒரு சவால் உள்ளது.

Bumrah 2

ஏனெனில் இந்திய பவுலர்கள் பவர்பிளே ஓவர்களின் போது மிகச் சிறப்பாக ஸ்விங் செய்து வீசுவார்கள். தென்னாப்பிரிக்க மண்ணில் நாங்கள் பந்து வீசுவதை விட இந்திய மண்ணில் இந்திய பவுலர்கள் அட்டகாசமாக பந்து வீசுவார்கள். எனவே இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் துவக்கப் ஓவர்களில் சற்று விக்கெட்டை விடாமல் நிதானித்து விளையாடிட்டு பின்னர் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற திட்டத்தை வைத்துள்ளோம்.

- Advertisement -

குறிப்பாக இந்திய வீரர்களான பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு எதிராக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இந்த தொடரில் புவனேஸ்வர் குமார் ஓய்வினை பெற்றுள்ளதால் பும்ராவிற்கு எதிராக சற்று நிதானமாக துவங்கி அதன் பின்னர் அதிரடியாக விளையாட விரும்புகிறோம் என்று தெம்பா பவுமா கூறினார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா டி20 தொடர் வெற்றி : ஐ.சி.சி டி20 அணிகளின் தரவரிசையில் இந்திய அணி – நிகழ்த்தியுள்ள சம்பவம்

மேலும் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் விக்கெட் விழாமல் இந்திய அணியின் ஸ்விங் பந்துவீச்சை சமாளித்து விளையாடிவிட்டால் அதன் பின்னர் எங்களது ஆட்டம் மிகச் சிறப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement