ஆஸ்திரேலியா டி20 தொடர் வெற்றி : ஐ.சி.சி டி20 அணிகளின் தரவரிசையில் இந்திய அணி – நிகழ்த்தியுள்ள சம்பவம்

India
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியதால் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது. அதன் காரணமாக விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மாவின் தலைமையில் தொடர்ச்சியாக இந்திய அணி டி20 போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது.

KL Rahul Virat Kohli Matthew Wade Hardik Pandya

- Advertisement -

அதே வேளையில் ஆசியக் கோப்பை தொடரில் ஒரு சிறிய சறுக்களை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களின் அடிப்படையில் அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிடும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டி20 தொடர் முடிந்த பிறகு டி20 கிரிக்கெட்டின் அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

INDvsAUS

அதில் இந்திய அணி மேலும் ஒரு புள்ளியை பெற்று 268 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் நீடிக்கிறது. இந்திய அணியை தொடர்ந்து இங்கிலாந்து அணி 261 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 258 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான அணியும் 258 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்து அணி 252 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணியானது 250 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 241 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், இலங்கை அணி 237 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், வங்கதேச அணி 224 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான அணி 219 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அவர மாதிரி ஒரு பிளேயர் பாகிஸ்தான் அணியில் இல்லை – இந்திய வீரரை மனதார பாராட்டும் அப்ரிடி

அடுத்தாக எதிர்வரும் டி20 உலககோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் தெ.ஆ அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது செப்டம்பர் 28-ஆம் தேதி இன்று திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement