அவர மாதிரி ஒரு பிளேயர் பாகிஸ்தான் அணியில் இல்லை – இந்திய வீரரை மனதார பாராட்டும் அப்ரிடி

Afridi
- Advertisement -

விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக தயாராகி வரும் உலகின் அனைத்து அணிகளும் தரமான வீரர்களை கண்டறிந்து வருகின்றன. அந்த வகையில் தங்களுக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா இருப்பது பேட்டிங் மற்றும் பவுலிங் துறைக்கு இடையே சம நிலையை ஏற்படுத்தி வலுவான அணியாக காட்சிப்படுத்துகிறது. கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் மகிழும் அளவுக்கு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஹர்டிக் பாண்டியா 2018 ஆசிய கோப்பை மற்றும் 2019 உலக கோப்பைக்குப்பின் சந்தித்த காயத்தால் மிகவும் அவதிப்பட்டார்.

- Advertisement -

குறிப்பாக முழுமையாக பந்து வீச முடியாமல் பேட்டிங்கிலும் தடுமாறிய அவர் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் பின்னடைவை சந்தித்த அவர் மனம் தளராமல் போராடி ஐபிஎல் 2022 தொடரில் தன்னை நம்பி வாங்கிய குஜராத் அணிக்கு மிகச் சிறந்த ஆல் ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று தனது திறமையை நிரூபித்தார்.

அதனால் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் அதன்பின் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் ஆசிய கோப்பையில் முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரிலும் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு முக்கிய பங்காற்றினார்.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

அப்ரிடி ஆதங்கம்:
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியிலும் நடைபெற்ற முதல் போட்டியிலும் இந்தியா தடுமாறியபோது கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக செயல்பட்டு மிகச்சிறந்த பினிஷிங் கொடுத்த அவர் மதிப்புடைய வீரராக திகழ்கிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், பினிஷிங் என ஆல்-ரவுண்டராக அசத்தும் பாண்டியா இந்திய டி20 அணியின் முக்கிய முதுகெலும்பு வீரராக போற்றப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பினிஷிங் செய்யும் வீரர் தங்களது அணியில் இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி பாராட்டி தங்களது அணியைப் பற்றி கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நமக்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவர் தேவைப்படுகிறது. போட்டியின் சூழ்நிலைக்கேற்ப பேட்டிங் வரிசையில் கீழே வரும் அவர் முக்கியமான ஓவர்களில் பந்து வீசி பேட்டிங்கில் பினிஷிங் செய்து கொடுப்பவராக உள்ளார்”

IND vs PAk Rahul Hardik Pandya

“அவரை போல பாகிஸ்தான் அணியில் எந்த வீரராவது பேட்டிங்கில் பொறுப்பேற்றுக் கொண்டு போட்டியை வெற்றிகரமாக பினிஷிங் செய்பவர்களாக இருக்கிறார்களா? அவரைப்போன்ற பினிஷர் நம்மிடம் இல்லை. ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகியோர் நமக்கு பினிஷிங் செய்வார்கள் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. மேலும் நவாஸ், சடாப் கான் ஆகியோரும் தொடர்ச்சியாக அந்த வேலையை செய்வதில்லை. இந்த நால்வரில் யாராவது ஒருவர் பினிஷிங் செய்வதில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும். இதில் சடாப் கான் பந்து வீச்சில் முக்கிய ஓவர்களில் பந்து வீசி வெற்றிக்கு பங்காற்றுகிறார்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல குஷ்தில் ஷா, ஆசிப் அலி போன்ற வீரர்களை பினிஷிங் செய்வதற்காக பாகிஸ்தான் வைத்திருந்தாலும் அவர்களால் ஹர்திக் பாண்டியாவை போல் பொறுப்பேற்றுக் கொண்டு பெரும்பாலான போட்டிகளில் வெற்றிகரமாக செயல்பட முடிவதில்லை. அந்த வகையில் உலக கோப்பையை வெல்வதற்கு பாண்டியா போன்ற வீரர் பாகிஸ்தான் அணிக்கு தேவைப் படுவதாக சாகித் அப்ரிடி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணி தோக்க பவுலர்கள் காரணமில்லை. சமீபத்திய தோல்விகளுக்கு காரணம் இதுதான் – விக்ரம் ரத்தோர் கருத்து

முன்னதாக ஆசிய கோப்பையில் இலங்கையிடம் தோற்று நாடு திரும்பிய பாகிஸ்தான் 17 வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் இது வரை நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதால் 2 – 2* (5) என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement