இந்திய அணி தோக்க பவுலர்கள் காரணமில்லை. சமீபத்திய தோல்விகளுக்கு காரணம் இதுதான் – விக்ரம் ரத்தோர் கருத்து

Rathour
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கடைசியாக நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இப்படி இந்திய அணி விளையாடிய கடைசி ஆறு போட்டிகளில் மூன்று வெற்றியும் மூன்று தோல்விகளையும் பெற்றது.

KL Rahul Virat Kohli Matthew Wade Hardik Pandya

- Advertisement -

குறிப்பாக இந்த மூன்று தோல்விகளுமே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து இருந்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படி இந்திய அணி பெரிய ரன்கள் குவித்தும் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் அடைந்த தோல்விக்கு பவுலர்கள் காரணம் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் தோற்க முக்கிய காரணம் மைதானத்தில் இருந்த பனிப்பொழிவுதான். மற்றபடி பவுலர்களின் மீது எந்த ஒரு குறையும் கிடையாது. பனிப்பொழிவின் காரணமாகவே பந்து பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக மாறுகிறது.

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

அதோடு மைதானத்தில் டியூ இருக்கும்பொழுது பவுலர்களால் பந்தை கிரிப் செய்து தாங்கள் நினைத்த இடத்தில் வீசுவதும் கடினமான ஒன்று என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும் அந்த இடங்களில் உள்ள குறையை கண்டுபிடித்து நாங்கள் முன்னேற்றம் காண இருக்கிறோம். நமது அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். ஆனால் முக்கியமான போட்டிகளில் டாஸ் என்பது பெரிய விடயமாக மாறுகிறது.

- Advertisement -

மைதானத்தில் பனிப்பொழிவு இருந்தால் எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். அந்த வகையில் தான் மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட 200 ரன்களுக்கு மேல் டார்கெட் இருந்தும் இந்திய அணியால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. நிச்சயம் இந்த விடயத்தில் நான் பவுலர்களை குறை கூறப்போவதில்லை.

இதையும் படிங்க : IND vs SA : தல – தளபதியை போல் ரோஹித் – விராட்டுக்காக கேரள ரசிகர்கள் செய்த வைரல் சம்பவம் – முழு விவரம் இதோ

ஏனெனில் மைதானத்தில் அவ்வளவு டியூ இருந்தாலும் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று ஒரு சில பந்துகள் வித்தியாசத்தில் தான் இந்திய அணி போட்டியை இழக்கிறது. நிச்சயம் இந்த ஒரு இக்கட்டான வேளையில் இருந்து இனி வரும் போட்டிகளில் இந்திய அணி அந்தக் குறையை நீக்கி பலமாக திரும்பும் என விக்ரம் ரத்தோர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement