உங்களுக்கு போட்டியா அந்த 2 பேர் வந்துட்டாங்க.. கேஎல் ராகுலை எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 22
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா சமன் செய்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தாலும் 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா குறைந்தபட்சம் தென்னாப்பிரிக்காவில் 13 வருடங்கள் கழித்து தொடரை சமன் செய்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

முன்னதாக இந்த தொடரில் ரிஷப் பண்ட் காயத்தால் விளையாடாததாலும் இசான் கிசான் சொந்த காரணங்களுக்காக வெளியேறியதாலும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்றார். குறிப்பாக கடந்த வருடம் ஆசிய மற்றும் உலகம் கோப்பையில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் இந்த தொடரில் அவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ராகுலுக்கு போட்டி:
அதை கச்சிதமாக பயன்படுத்திய ராகுல் முதல் போட்டியில் தனி ஒருவனாக சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி அனைவரது பாராட்டுகளை பெற்று ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதன் காரணமாக அடுத்ததாக நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் வந்தால் கேஎல் ராகுலுக்கு விக்கெட் கீப்பராக வாய்ப்பு கிடைக்காது என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே ஓப்பனிங்கிலும் ரோகித் சர்மா, கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற வீரர்கள் நிறைந்திருப்பதால் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் ஐயருடன் போட்டி போடும் நிலைமை விரைவில் கேஎல் ராகுலுக்கு உருவாகும் என்று கூறும் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கவனம் செலுத்துகிறார். இத்தொடரில் சதமடித்த பின் தமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புக்கும் அவர் மதிப்பு கொடுக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இருப்பினும் இப்போதிலிருந்து 2 வருடத்தில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு அவர் ஸ்ரேயாஸ் ஐயருடன் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை பார்க்கிறேன்”

இதையும் படிங்க: இந்த தொடரே வேஸ்ட் தான்.. இந்தியா அதை செய்யக்கூடாது.. தெ.ஆ வாரியத்தை விளாசிய ரவி சாஸ்திரி

“ஏனெனில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக உங்களுக்கு பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் பெரிய சாதகத்தை ஏற்படுத்துவார். முதல் போட்டியில் ராகுல் அடித்த சதம் அபாரமானது. துரதிஷ்டவசமாக டீன் எல்கர் 185 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்கா 400 ரன்கள் எடுத்த போது நாம் 260 ரன்கள் மட்டுமே எடுத்ததால் வெற்றி பெற முடியவில்லை. அந்த தருணம் தான் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைப்பதற்கான வாய்ப்பையும் இந்தியா தவற விட்டது” என்று கூறினார்.

Advertisement