இந்த தொடரே வேஸ்ட் தான்.. இந்தியா அதை செய்யக்கூடாது.. தெ.ஆ வாரியத்தை விளாசிய ரவி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதன் வாயிலாக 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்த இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

குறிப்பாக முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 2வது போட்டியில் திருப்பி அடித்து தென்னாப்பிரிக்காவை 55க்கு ஆல் அவுட்டாக்கி அதிரடியான வெற்றி பெற்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.

- Advertisement -

வேஸ்ட் ஆஃப் டைம்:
இந்நிலையில் வெறும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்துவது நேரத்தை வீணடிக்கும் செயல் என தென்னாப்பிரிக்க வாரியத்தை ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். ஏனெனில் 3வது போட்டி நடைபெற்றிருந்தால் ஒன்று தென்னாப்பிரிக்கா கோப்பையை வென்றிருக்கும் அல்லது தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்திருக்கும் என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே அடுத்த மாதம் நடைபெறும் சிஎஸ்ஏ டி20 தொடருக்காக இந்த தொடரை வெறும் 2 போட்டியுடன் நிறுத்திய தென்னாப்பிரிக்க வாரியத்தை விமர்சிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரை பார்த்த பின் இனிமேல் இந்தியா எப்போதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடக் கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும்”

- Advertisement -

“இனிமேல் 2 போட்டிகளில் மட்டும் விளையாட வாருங்கள் என்று எந்த நாடாவது அழைத்தால் நாம் செல்லக்கூடாது. ஏனெனில் அது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எப்போதும் ஒருநாள் அல்லது டி20 அல்லது டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அப்படி செய்திருந்தால் நீங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் எளிதாக 3 டி20 மற்றும் 3 டெஸ்டில் விளையாடியிருக்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: என்னா மனசுய்யா.. ஆங்கிலம் தெரியாமல் சிராஜ் கொடுத்த பாராட்டை மறுத்த பும்ரா.. விவரம் இதோ

முன்னதாக கடந்த 2020/21இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 36க்கு ஆல் அவுட்டாகியும் அதன் பின் கொதித்தெழுந்த இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அந்த வகையில் இத்தொடரில் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தால் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும் என்று ரசிகர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா தொடரில் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement