என்னா மனசுய்யா.. ஆங்கிலம் தெரியாமல் சிராஜ் கொடுத்த பாராட்டை மறுத்த பும்ரா.. விவரம் இதோ

Mohammed Siraj Bumrah
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன் நகரில் நடைபெற்ற முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை பரிசளித்த தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா 13 வருடங்கள் கழித்து அந்நாட்டில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்தது.

முன்னதாக நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவை தெறிக்க விட்ட முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் விளாசி வெறும் 55 ரன்களுக்கு சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றினார். அதே போல 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்து தம்முடைய பங்கிற்கு தென்னாப்பிரிக்காவை மிரட்டிய பும்ரா இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

பும்ராவின் மனசு:
இருப்பினும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதைத் தொடர்ந்து போட்டியின் முடிவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் உங்களுடைய சிறந்த செயல்பாடுக்கு என்ன காரணம் என்று சிராஜிடம் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் இந்தியில் சிராஜ் பதிலளித்த நிலையில் அருகில் அதை மொழிமாற்றம் செய்வதற்காக பும்ரா காத்திருந்தார்.

அப்போது சிராஜ் முதலில் பேசியது பின்வருமாறு. “பும்ரா பாயுடன் சேர்ந்து பந்து வீசத் துவங்கும் போது பிட்ச் எப்படி இருக்கும், எந்த மாதிரியான லைனில் வீச வேண்டும் என்பது போன்ற மெசேஜ் அவரிடம் இருந்து எனக்கு ஆரம்பத்திலேயே கிடைத்து விடும். அதை பின்பற்றினால் என்னால் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று எனக்கு தெரியும். எனவே எதிர்புறத்தில் பும்ரா பந்து வீசுவது எனக்கு எப்போதுமே பெரிய உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -

ஆனால் அதை மொழிமாற்றம் செய்து பும்ரா பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒன்றாக விளையாடும் போது மைதானத்தை பற்றிய மெசேஜை அனுபவத்தால் கிடைக்கிறது. அதனால் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பந்து வீச்சு கூட்டணியில் நாங்கள் சேர்ந்து விரைவாக அலசி அதை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கேற்றார் போல் செயல்பட முயற்சிக்கிறோம். அது எனக்கு சில நேரங்களில் உதவுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: கங்குலி சார் முன்னாடியே கால் பண்ணி என்கிட்ட சொல்லிட்டுதான் என்னை செலக்ட் பண்ணாரு – 19 வயது வீரர் நெகிழ்ச்சி

அதாவது சிராஜ் தமக்கு கொடுத்த பாராட்டை முற்றிலுமாக பும்ரா தவிர்த்து விட்டார். மாறாக இந்த செயல்பாடுகளுக்கு முழுக்க முழுக்க சிராஜ் தான் காரணம் என்று சொல்லி மொழிமாற்றம் செய்யும் போது தமக்கு கொடுத்த பாராட்டை பும்ரா தவிர்த்து விட்டார். அதை பார்க்கும் ரசிகர்கள் தாமாக கிடைத்த பாராட்டை தவிர்த்து முழுவதுமாக சிராஜை பெருமைப்படுத்திய உங்களுடைய மனசு வேற லெவல் என்று பும்ராவை பாராட்டி வருகின்றனர்.

Advertisement