கங்குலி சார் முன்னாடியே கால் பண்ணி என்கிட்ட சொல்லிட்டுதான் என்னை செலக்ட் பண்ணாரு – 19 வயது வீரர் நெகிழ்ச்சி

Kumar-Kushagra
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி வீரர்களுக்கான மினி ஏலமும் துபாயில் நடைபெற்று முடிந்தது.

இந்த ஏலத்தில் 10 அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டு இளம் வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 19 வயது வீரரான குமார் குஷாக்ரா என்பவரை 7.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத 19 வயதான இளம் வீரரை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதற்கு என்ன காரணம்? என்றும் பலரும் தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தேர்வானது குறித்து பேசியுள்ள குமார் குஷாக்ரா கூறுகையில் : சௌரவ் சார் என்னை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுக்கப் போவதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டார்.

- Advertisement -

அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே என்னுடைய செயல்பாடுகளை பாராட்டி வரும் அவர் என்னுடைய ஆட்டத்தை நேரில் பார்க்கவும் ஆசைப்பட்டார். அந்த வகையில் குருகிராமில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நான் விளையாடியதை அவர் பார்த்தார். அதுமட்டுமில்லாமல் பெங்களூருவில் நடந்த முகாமிலும் 25 பந்துகளில் 62 ரன்களை குவித்தேன்.

இதையும் படிங்க : லெஜெண்ட் ஜஹீர் கானை சமன் செய்த பும்ரா.. வெளிநாட்டில் முதல் இந்தியராக அற்புதமான சாதனை

அதற்கடுத்து கொல்கத்தாவில் நடைபெற்ற முகாமில் 23 பந்துகளில் 60 ரன்கள் குவித்தேன். இது போன்ற ஒரு சில ஆட்டமே என்னை டெல்லி அணிக்காக தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது. அதோடு தனிப்பட்ட முறையில் சௌரவ் கங்குலி சார் என் மீது வைத்த நம்பிக்கையும் நான் அந்த அணிக்காக தேர்வானத்திற்கு மிகப்பெரிய காரணம் என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement