லெஜெண்ட் ஜஹீர் கானை சமன் செய்த பும்ரா.. வெளிநாட்டில் முதல் இந்தியராக அற்புதமான சாதனை

Jasprit Bumrah 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்ற 1 – 1 கணக்கில் சமனில் முடிந்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இருப்பினும் 2வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் 2வது போட்டி நடைபெற்ற கேப் டவுன் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

- Advertisement -

வெளிநாட்டில் கில்லி:
இந்த வெற்றியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் தடுமாறிய இந்தியா மீண்டும் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை முந்தி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தும் முழு மூச்சுடன் போராடியும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இருப்பினும் 2வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் தம்முடைய பங்கிற்கு 2 விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு சுருட்ட உதவிய பும்ரா 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை எடுத்து இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினர். அந்த வகையில் 2 போட்டிகளில் மொத்தம் 12 விக்கெட்களை 12.91 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ள அவர் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

மேலும் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை எடுத்த அவர் சேனா நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய சவாலான வெளிநாடுகளில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்த 2 இந்திய பவுலர் என்ற ஜாம்பவான்கள் ஜாஹீர் கான், சந்திரசேகர் சாதனையை சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. கபில் தேவ் : 7
2. ஜஸ்பிரித் பும்ரா/பிஎஸ் சந்திரசேகர்/ஜாகீர் கான் : தலா 6

இதையும் படிங்க: 58/2 டூ 68/7 என சொதப்பும் பாகிஸ்தான்.. வரலாற்றை மாற்றும் வாய்ப்பைத் தவற விட்ட பரிதாபம்?

அத்துடன் சேனா நாடுகளில் வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆசிய பவுலர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கபில் தேவ், ஜவஹல் ஸ்ரீநாத், ஜகீர் கான் உள்ளிட்ட வேறு எந்த இந்திய பவுலர்களும் தங்களின் கேரியரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 4 சவாலான வெளிநாடுகளில் இந்தியா வென்ற போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்ததில்லை. அந்த பட்டியல்:
1. வாசிம் அக்ரம் : 70
2. வாக்கார் யூனிஸ் : 60
3. முஸ்தாக் அஹ்மத் : 57
4. ஜஸ்பிரித் பும்ரா : 55*
5. முத்தையா முரளிதரன் : 42

Advertisement