58/2 டூ 68/7 என சொதப்பும் பாகிஸ்தான்.. வரலாற்றை மாற்றும் வாய்ப்பைத் தவற விட்ட பரிதாபம்?

AUS vs PAK 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அந்நாட்டில் முதல் முறையாக தொடரில் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முடிந்தளவுக்கு போராடி 313 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் 34, உஸ்மான் கவாஜா 47, லபுஸ்ஷேன் 60, ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 205/4 என்ற நல்ல நிலைமையில் இருந்தது.

- Advertisement -

தவறவிடும் பாகிஸ்தான்:
இருப்பினும் அடுத்து வந்த வீரர்களில் மிட்சேல் மார்ஷ் 54 ரன்கள் எடுத்ததை தவிர்த்து டிராவிஸ் ஹெட் 10, அலெக்ஸ் கேரி 38 என இதர வீரர்கள் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஆஸ்திரேலியாவை 299 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக இளம் வீரர் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை சாய்த்து போட்டியில் பெரிய திருப்பு முனையை உண்டாக்கினார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் அதன் காரணமாக 14 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமானது. ஆனால் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக், கேப்டன் ஷான் மசூட் என 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 1/2 என்ற துவக்கத்தை பெற்ற பாகிஸ்தானை 2வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயற்சித்த சாய்ம் ஆயுப் 33 ரன்களிலும் பாபர் அசாம் 23 ரன்களிலும் அவுட்டானார்கள்.

- Advertisement -

ஆனால் அப்போது வந்த சௌத் ஷாகீலை 2 ரன்களில் அவுட்டாக்கிய ஹேசல்வுட் அடுத்ததாக வந்த சஜித் கானை கிளீன் போல்ட்டாக்கி அதற்கு அடுத்ததாக வந்த ஆகா சல்மானையும் டக் அவுட்டாக்கினார். அதன் காரணமாக 58/2 என்ற நிலைமையில் இருந்த பாகிஸ்தான் திடீரென 67/7 என சரிந்து 3வது நாள் முடிவில் 68/7 என்று திண்டாடி வருகிறது.

இதையும் படிங்க: ஸ்டம்பிங்கிற்கு ரெவியூ கேட்டால் இனிமேல் இப்படித்தான் நடக்கும் – ஐ.சி.சி கொண்டுவந்துள்ள புதிய விதிமுறை

அந்த அணிக்கு முகமது ரிஸ்வான் களத்தில் இருக்கும் நிலையில் எதிர்புறம் கை கொடுப்பதற்கு முழுமையான பேட்ஸ்மேன் இல்லாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் சொதப்பிய அந்த அணி தற்போது வெறும் 82 ரன்களை மட்டுமே முன்னிலையாக பெற்றிருப்பதால் முதல் இரண்டரை நாட்களில் போராடி கொண்டு வந்த வெற்றி பறிபோவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 1998க்குப்பின் 28 வருடமாக தொடர்ந்து 16 போட்டிகளாக ஆஸ்திரேலிய மண்ணில் சந்தித்து வரும் மோசமான வரலாற்றை நிறுத்துவதற்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement