சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி உலக ரசிகர்களின் மத்தியில் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்துவதற்காக சில முன்னேற்ற நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. அந்தவகையில் குறிப்பிட்ட சில விதிமுறைகளையும் தொகுக்கும் அவர்கள் சரியான முறையில் புதிய விதிமுறைகளை அவ்வப்போது அறிவித்து வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே கிரிக்கெட்டில் நடைமுறையில் உள்ள சில விதிகளில் ஒரு சில மாற்றங்களை செய்தும் புதிய விதிமுறைகளாக அறிவிப்பார்கள். அந்த வகையில் தற்போது ஸ்டம்பிங் செய்யும் விதியில் ஒரு மாற்றத்தை ஐசிசி கொண்டு வந்துள்ளது.
அதாவது வழக்கமாக ஸ்டம்பிங்கிற்கு விக்கெட் கேட்கப்பட்டால் மூன்றாவது அம்பயரிடம் அந்த அழைப்பு செல்லும். அப்போது மூன்றாவது அம்பயர் ரிவ்யூ செய்யும்போது ஸ்டம்பிங்கை சோதனை முன்னர் பந்து பேட்டில் பட்டதா? என்று ஸ்னிக்கோ மீட்டர் உதவியுடன் முதலில் சோதனை செய்வார்.
அப்படி சோதிக்கப்பட்ட பின்னரே ஸ்டம்பிங் சோதனை செய்யப்படும். இது பந்துவீசும் அணிக்கு கூடுதல் சாதகத்தை தரும். இந்நிலையில் இந்த விதிமுறையில் சிறிது மாற்றம் செய்துள்ள ஐசிசி : இனி பவுலர் மூலம் ஸ்டம்பிங் செக் கேட்டால் லெக் சைடு அம்பயர் ஸ்டம்பிங் சோதனைக்காக மூன்றாவது அம்பயரிடம் செல்வார்.
அப்போது லெக்சைடு மற்றும் ஆப்சைடு என இரண்டு திசைகளிலும் உள்ள கேமராக்களின் மூலம் ஸ்டம்பிங் மட்டுமே சோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படி ஸ்டம்பிங் சோதனை செய்யப்படும்போது பேட்ஸ்மேனின் பேட்டில் பந்து பட்டதா? என்ற ஸ்னிக்கோ மீட்டர் சோதனை எல்லாம் செய்யப்படாது என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் முடிவால் குழப்பத்தில் உள்ள அஜித் அகார்கர் – அணியில் நடைபெறவுள்ள மாற்றம்
அதனால் இனி ஸ்டம்பிங் சோதனை நடைபெற்றால் பேட்ஸ்மேனின் கால் கிரீஸில் இருக்கிறதா? இல்லையா? என்பதை வைத்து மட்டுமே மூன்றாவது அம்பயர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.