- Advertisement -
இந்திய கிரிக்கெட்

குல்தீப் யாதவ் செய்த தவறு இதுதான்.. ஆதில் ரஷீதை பாத்து கத்துக்கோங்க – சஞ்சய் மஞ்சரேக்கர் காட்டம்

கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சுழற்பந்து பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இதுவரை 107 போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். என்னதான் ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அவர்து சமீபத்திய பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்து வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

குல்தீப் யாதவ் செய்த தவறு இதுதான் : சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்

தோனி கேப்டனாக இருந்தவரை பந்துவீச்சில் உச்சத்தில் இருந்த குல்தீப் யாதவ் தோனியின் அறிவுரைகளை ஏற்று விக்கெடுகளை குவித்து வந்தார். ஆனால் தோனி ஓய்வு பெற்று வெளியேறிய பிறகு இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் தற்போது தான் மீண்டும் ஓரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தொடர்ந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெரிய அளவில் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 8 ஓவர்கள் வீசிய அவர் 38 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி ஏமாற்றம் அளித்திருந்தார்.

இந்நிலையில் குல்தீப் யாதவின் தவறு என்ன? என்றும் அவர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் அவருக்கு காட்டமான சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியில் தொடர்ச்சியாக குல்தீப் யாதவ் விளையாட முடியாமல் போவதற்கு அவரது உடற்தகுதியும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே அவர் அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். மேலும் நேற்றைய போட்டியின் போது அவர் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு கவலை அளித்தது.

- Advertisement -

ஏனெனில் அவர் வேகமாக தொடர்ந்து பந்து வீசுகிறார். அப்படி வேகமாக பந்துவீசும் போது பந்து திரும்பாது. அவருடைய பலமே பந்தினை திருப்புவதில்தான் இருக்கிறது. எனவே ஆடுகளத்தை கணித்து மெதுவாக பந்து வீசினால் பந்து நிச்சயம் திரும்பும். பந்து திரும்பும் போது தான் அவருக்கு விக்கெட்டுகள் விழும். ஆனால் அவர் வேக வேகமாக பந்துவீசி தவறு செய்வதாலே அவரால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது.

இதையும் படிங்க : தல தோனி, சீக்கா ஸ்ரீகாந்த் ஆகியோருடன் 7 ஆவது இந்திய வீரராக சாதனை பட்டியலில் இணைந்த – சுப்மன் கில்

அதேவேளையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீதை பார்த்தால் மிகச் சிறப்பாக பந்தினை மெதுவாக வீசி பந்தினை திருப்பி இந்தியாவின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து அவர் 80 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பந்து வீசினார். எனவே அவரைப் போன்று மைதானத்தின் தன்மையை கணித்து அதற்கேற்ற வேகத்தில் பந்துவீசினால் குல்தீப் யாதவால் நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீள முடியும் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -