டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடைத்தை நிரப்ப இவர்தான் சரியான ஆள் – சஞ்சய் பாங்கர் கருத்து

Bangar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருபவர் விராட்கோலி. சமீப காலமாகவே தனது பேட்டிங்கில் ஏற்பட்ட சிறிய தொய்வு காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் அடுத்தடுத்த தொடர்களில் விளையாடி வந்த விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து ஓய்வு எடுக்க விருப்பம் தெரிவித்து அணியில் இருந்து விலகியுள்ளார்.

Kohli

- Advertisement -

இந்த நேரத்தில் பல புதிய வீரர்களை கொண்ட இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டி20 வடிவ இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு மாற்று வீரராக எந்த பேட்ஸ்மேன் சரியாக இருப்பார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போதைய இந்திய அணியின் பென்ச் வலிமை மிகவும் பலமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் அய்யர் அட்டகாசமாக விளையாடி வருகிறார். விராட் கோலிக்கு பதிலாக தனக்கு கிடைத்த நம்பர் 3 இடத்தை அவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு எதிராக மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தினார்.

shreyas iyer

எப்போதுமே டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய விரும்பும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்த வேளையில் தற்போது டி20 கிரிக்கெட்டில் முன்கூட்டியே களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நிச்சயம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஏற்கனவே சற்று வலுவாக இருந்தாலும் நம்பர் 3 இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் கூடுதல் பலத்தை அளிப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

மேலும் விராட் கோலிக்கு காயமோ அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் ஷ்ரேயாஸ் ஐயரை சற்று முன் கூட்டி மூன்றாவது இடத்தில் விளையாட வைக்கலாம். அந்த அளவிற்கு அவர் ஒரு அட்டகாசமான பேட்ஸ்மேன். எதிர்காலத்தில் நிச்சயம் விராத் கோலியின் மூன்றாவது இடத்தை நிரப்பும் அனைத்து திறனும் அவரிடம் உள்ளது என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எனக்கும் வாசிம் ஜாபருக்கும் தொடர்ந்து சண்டை வர காரணமே இதுதான் – மைக்கல் வாகன் ஓபன்டாக்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 28 பந்துகளை சந்தித்த அவர் 57 ரன்களை குவித்தார். அதோடு இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 34 போட்டிகளில் விளையாடி 662 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement