எனக்கும் வாசிம் ஜாபருக்கும் தொடர்ந்து சண்டை வர காரணமே இதுதான் – மைக்கல் வாகன் ஓபன்டாக்

Vaughan-1
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் பங்கு பெறும் வீரர்களுக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் நடப்பது இயல்பான ஒன்றாகும். சில வீரர்கள் வார்த்தைகளால் மோதிக் கொள்வார்கள், சிலர் களத்திலேயே எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகலப்பில் ஈடுபடுவார்கள். மேலும் சிலர் களத்திற்கு வெளியே சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக் கொள்வார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த வீரர்கள் நண்பர்களாக மாறியதையும் பலமுறை பார்த்துள்ளோம்.

cricket match

- Advertisement -

எடுத்துக்காட்டாக ஹர்பஜன் சிங் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோர் ஒரு காலத்தில் மிகப் பெரிய சண்டையில் ஈடுபட்டு அதன் பின் ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடினார்கள். அதேபோல் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த ஹர்பஜன் சிங் நாளடைவில் மீண்டும் அவருடன் இணைந்து இந்திய அணியில் விளையாடிய வரலாறும் உள்ளது.

வாசிம் ஜாபர் – மைக்கேல் வாகன்:
இருப்பினும் அதெல்லாம் சமூக வலைத்தளங்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லாத காலத்தில் நடந்தது. ஆனால் தற்போது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என பல வகையான சமூக வலைதளங்கள் வந்துவிட்டதால் தற்போதெல்லாம் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட இந்த சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் ஆகியோர் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் இவர்கள் சண்டையில் ஈடுபடுவது எப்போதுமே சண்டையாக இருக்காது. மாறாக ரசிகர்களுக்கு ஜாலியாகவும் என்டர்டைய்மென்ட்டாகவும் அமையும். சொல்லப்போனால் இப்போதெல்லாம் இந்த இருவரும் தினந்தோறும் கிரிக்கெட் பற்றி தங்களது சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். குறிப்பாக மைக்கேல் வாகன் வாசிம் ஜாபரை கலாய்க்க முயற்சிப்பதும் அதற்கு வாசிம் ஜாபர் மீம்ஸ் வாயிலாக தக்க பதிலடி கொடுப்பதால் மைக்கேல் வாகன் இறுதியில் பல்பு வாங்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

- Advertisement -

எப்போது துவங்கியது:
இப்போதெல்லாம் இவர்கள் பேசிக்கொள்வது சண்டையாக இல்லாமல் ஜாலியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கே உலகம் முழுவதிலும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் வாசிம் ஜாபருடன் இவ்வாறு சண்டை போடுவதற்கான காரணம் எப்போது துவங்கியது என்பது பற்றி மைக்கேல் வாகன் மனம் திறந்துள்ளார். இதுபற்றி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Jaffer

“வாசிம் தான் எனது முதல் டெஸ்ட் விக்கெட். இவை அனைத்தும் கடந்த 2002ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியின்போது நான் வீசிய பந்தில் அவர் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனபோது துவங்கியது. என்னை போன்ற ஒருவர் வீசும் பந்துவீச்சில் அவர் அவுட்டானால் அவரின் பேட்டிங் திறமை மிகச் சிறப்பாக இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை” என மீண்டும் அவரை வம்பிழுக்கும் வகையில் கலகலப்பாக கூறினார்.

- Advertisement -

கடந்த 2002ஆம் ஆண்டு வாக்கில் இந்திய டெஸ்ட் அணியில் நிறைய போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்ட போதிலும் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட மைக்கேல் வாகன் ஒரு பகுதிநேர பந்து வீச்சாளராக வாசிம் ஜாபருக்கு பவுலிங் செய்தார். ஆனால் அவர் வீசிய ஒரு சுமாரான பந்தில் அவரே எதிர்பாராத வண்ணம் வாசிம் ஜாபர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது முதல் வாசிம் ஜாபரை கலாய்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று மைக்கேல் வாகன் தற்போது உண்மையான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

vaughan

ஜாலிக்கு மட்டுமே:
அப்போது குறுக்கிட்டுப் பேசிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதே தொடரில் இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வீசிய பந்து வீச்சில் மைக்கேல் வாகன் அவுட்டானது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் எப்போதுமே என்னிடம் மென்மையாக நடந்து கொள்வார் என்பது உங்களுக்கு தெரியாது. மேலும் வாசிம் அக்ரம் போல்ட்டாகவில்லை. கேட்ச் கொடுத்துதான் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அத்துடன் எப்போதும் நாங்கள் இருவரும் ஜாலியாக பேசிக் கொள்வதை விரும்புகிறேன். இன்றுகூட டுவிட்டரை இன்னும் திறந்து பார்க்கவில்லை. எனவே அவருக்காக காத்திருக்கிறேன்” என பதிலளித்தார். என்னதான் ட்வீட்டரில் சண்டை போட்டாலும் அவை அனைத்துமே ஜாலியான ஒன்றுதான் என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவை நான் அப்படி பேசினது தப்புதான் – தமிழக வீரர் அஷ்வினிடம் மன்னிப்பு கேட்ட மைக்கல் வாகன்

இங்கிலாந்துக்காக 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தலா 18 அரை சதங்கள் மற்றும் சதங்கள் உட்பட 5719 ரன்களை எடுத்துள்ளதுடன் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement