இந்தியாவை நான் அப்படி பேசினது தப்புதான் – தமிழக வீரர் அஷ்வினிடம் மன்னிப்பு கேட்ட மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்றது. புகழ்பெற்ற அடிலெய்ட் நகரில் துவங்கிய அந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் அதிரடியான பந்துவீச்சில் முதல் இன்னிங்சில் ஓரளவு மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றிலேயே படுமோசமான சரித்திர தோல்வியை சந்தித்தது.

INDvsAUS

- Advertisement -

அந்த நேரத்தில் கேப்டன் விராட் கோலியும் தனது குழந்தை பிறப்பதற்காக நாடு திரும்பியதால் இந்தியாவிற்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. ஏற்கனவே திண்டாடும் இந்திய அணி விராட் கோலியும் இல்லாத காரணத்தால் கண்டிப்பாக 4 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்திக்கும்போது என இங்கிலாந்தின் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், பிராட் ஹேடின் போன்ற பல முன்னாள் வீரர்கள் கணித்தார்கள்.

கணிப்பை பொய்யாக்கிய இந்தியா:
அப்படிப்பட்ட படுமோசமான தருணத்தில் மெல்போர்ன் நகரில் நடந்த 2வது போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்திய அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே அபாரமாக பேட்டிங் செய்து சதம் விளாசி இந்திய வீரர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டினார். அதில் மீண்டெழுந்த இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இறுதியில் அபார வெற்றி பெற்று 1 – 1 என தொடரை சமன் செய்து ஆஸ்திரேலியாவிற்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருப்பினும் அந்தப் போட்டியில் முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா ஆகிய முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அடுத்தடுத்து விலகினார்கள்.

indvsaus

அதை தொடர்ந்து சிட்னி நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியதால் கிட்டத்தட்ட தோல்வியின் பிடியில் இந்தியா சிக்கியது. ஆனால் அந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக பேட்டிங் செய்து 90களில் அவுட்டானதால் வெற்றியை நோக்கி நடந்த இந்தியா திடீரென்று தோல்வியை நோக்கி சென்றது. ஆனால் அப்போது போராடிய ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஷ்வின், புஜாரா போன்ற வீரர்கள் பாறை போல களத்தில் நின்று ஆஸ்திரேலிய பந்து வீச்சை எதிர்கொண்டு அந்த போட்டியை போராடி டிரா செய்தார்கள்.

- Advertisement -

வரலாற்று வெற்றி:
அந்த போட்டியில் 4வது போட்டி நடைபெறும் காபாவுக்கு வா பார்த்துக்கொள்வோம் என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் வம்பிழுத்தார். ஏனெனில் காபா மைதானத்தில் கடந்த 32 வருடங்களாக எந்த ஒரு அணியிடமும் தோற்காமல் ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றிகளை பெற்று வந்தது. அப்படிப்பட்ட வேளையில் காபாவில் துவங்கிய கடைசி போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், விஹாரி போன்ற மேலும் சில முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியதால் வேறுவழியில்லாமல் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற முன் அனுபவம் இல்லாத வீரர்கள் முதல் முறையாக இந்தியா களமிறக்கியது.

INDvsAUS

ஆனால் அப்போதும் அசத்திய இந்தியா அனுபவ வீரர்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 32 ஆண்டுகளுக்கு பின் பிரிஸ்பேன் மைதானத்தில் வீழ்த்தி காபா மைதானத்தில் இந்திய வெற்றிக் கொடியை பறக்க விட்டது. அதன் காரணமாக 2 – 1 என்ற கணக்கில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. மொத்தத்தில் ஒரு கட்டத்தில் 4 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வி உறுதி என கணித்த பல வீரர்களின் கருத்துக் கணிப்பை இந்தியா பொய்யாக்கியதுடன் சாதனையும் படைத்தது.

- Advertisement -

ஒப்புக்கொள்ளும் மைக்கேல் வாகன்:
இந்நிலையில் 4 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடையும் என கணித்தது தவறுதான் என இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுபற்றி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா சற்றுபின் வாங்குவதை நான் பார்க்க விரும்பினேன். ஆனால் நீங்கள் அனைத்து நாட்களிலும் கடுமையாக போராடி இறுதியில் கடைசி நாளில் போட்டியை டிரா செய்தீர்கள். அதன்பின் காபாவில் ஆஸ்திரேலியர்கள் தோற்க மாட்டார்கள் என்ற நிலையில் நடைபெற்ற 4வது போட்டியில் கடைசி நாளில் அவர்களை நீங்கள் தோற்கடித்தீர்கள். எனவே இது வரலாற்றிலேயே ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் என நான் நினைக்கிறேன்”

Vaughan

“அடிலெய்டில் நீங்கள் மோசமாக பந்துவீசியபோது உங்களைப்பற்றி தவறாக எண்ணி விட்டேன். ஆனால் திடீரென்று நீங்கள் அந்த தொடரை வெல்ல நம்பமுடியாத அளவிற்கு மீண்டு வந்தீர்கள். விராட் கோலி இல்லாத கடினமான நிலையில் ஆஸ்திரேலியாவில் 1 – 0 என்ற கணக்கில் தவித்தபோது ரகானே தலைமை தாங்கினார். அந்த நிலையில் இருந்து வரலாற்றில் மீண்டு வந்ததே கிடையாது” என பாராட்டியுள்ள அவர் ஆரம்பத்தில் இந்தியாவை குறைத்து எடை போட்டது தவறு தான் என்று ஒப்புக்கொள்ளும் வகையில் பேசினார்.

- Advertisement -

வரலாற்றின் மிகசிறந்த டெஸ்ட் தொடர்:
விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட பல நட்சத்திர முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் கிடைத்த வெற்றி என்பதால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அந்த தொடர் ஒரு மிகவும் சிறந்த தொடராக கருதப்படுகிறது. குறிப்பாக அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் காபா மைதானத்தில் நடந்த போட்டியின் கடைசி நாளில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அபாரமாக பேட்டிங் செய்து 89* ரன்கள் குவித்து இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு வித்திட்டார்.

Indian-Fans

இது பற்றி மைக்கல் வாகன் மேலும் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா தோற்காத பிரிஸ்பேனில் நடந்த கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற ரிஷப் பண்ட் விளையாடிய விதத்தில் நீங்கள் சகித்துக்கொண்ட அனைத்தும் சேர்ந்து கொந்தளிப்புகளுடன் வெளிப்பட்டது சிறப்பான ஒன்றாகும். அந்த டெஸ்ட் தொடரை வென்றது மிக மிகச் சிறந்த தருணமாகும். ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கும் எந்த அணியுமே எனது பார்வையில் எப்போதும் ஒரு தரமான அணியாகும்”.

“என்னைப் பொறுத்தவரை அணியில் வந்து செல்லக்கூடிய வீரர்களாக இருப்பவர்கள் கூட சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று கொடுத்ததால் கடந்த 10 – 15 வருடங்களில் நான் பார்த்த மிகப்பெரிய டெஸ்ட் தொடர் வெற்றி இது.

இதையும் படிங்க : விக்கெட் கீப்பர் சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள நடவடிக்கை என்ன தெரியுமா?

அதில் நிறைய வீரர்கள் காயம் காரணமாக விலகினார்கள். ஆனால் சிராஜ் மேஜிக் நிகழ்த்தினார். சிட்னியில் டிம் பெயின் சிறிது கேலி செய்ததற்கு தக்க பதிலடி கொடுத்ததை ரசித்தேன்” என கூறியுள்ளார்.

Advertisement