ரொம்ப பெருமை பேசாதீங்க.. அதுல பாகிஸ்தானுக்கு கொஞ்சமும் சளைக்காம இந்தியாவும் சமம் தான் இருக்கு – சஞ்சய் பங்கர் பதிலடி

Sanjay Bangar 2
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் லீக் சுற்றில் தலா 1 வெற்றியை பெற்ற இவ்விரு அணிகளும் அடுத்ததாக செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் சூப்பர் 4 சுற்றில் இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரில் மோத உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் சுற்றில் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினர். அதனால் 66/4 என சரிந்த இந்திய அணியை மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 226 ரன்கள் அடித்த உதவி ஓரளவு காப்பாற்றினர். இருப்பினும் நிறைய முன்னாள் வீரர்கள் எச்சரித்தும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்களால் தங்களுடைய விக்கெட்டை காப்பாற்ற முடியாத அளவுக்கு பாகிஸ்தானின் பவுலிங் அபாரமாக இருந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்தியாவும் சமமே:
மேலும் இதே தொடரில் நேபாள், வங்கதேசம் போன்ற அணிகள் கத்துக்குட்டி தான் உறுதியாக என்று சொல்லும் அளவுக்கு சாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா ஆகியோர் தெறிக்க விடும் பவுலங்கை வெளிப்படுத்தினர். மொத்தத்தில் தற்சமயத்தில் பாகிஸ்தானின் பேட்டிங்கை விட பவுலிங் மிகவும் உலகத்தரம் வாய்ந்த துல்லியமானதாக இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு நிகராக இந்தியாவின் பவுலிங் சரிக்கு சமமாக இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு அட்டாக் போலவே நன்றாக இருக்கிறது. உங்களிடம் முகமது சிராஜ், முஹம்மது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளார்கள். எனவே தனித்தனியே பார்க்கும் போது நாம் பாகிஸ்தான் அட்டாக்கிற்கு நிகரான பவுலர்களை கொண்டிருக்கிறோம். அந்த நிலையில் பாகிஸ்தான் பவுலர்கள் தற்போது பேட்டிங்க்கு சாதகமாக இருந்த சூழ்நிலைகளைக் கொண்ட தங்களுடைய நாட்டிலிருந்து வெளியேறி இலங்கையில் விளையாட உள்ளனர்”

- Advertisement -

“ஆனால் இலங்கையில் சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 வகையான பவுலர்களுக்கும் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். குறிப்பாக அங்குள்ள மைதானங்களில் பந்து சற்று நின்று மெதுவாக வரும். அதனால் வேகத்திற்கு எதிராக விளையாட பழகிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இலங்கை சூழ்நிலைகளில் சற்று தடுமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய இர்பான் பதான் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமா? அவங்கள அவமானப்படுத்தாதீங்க – ஆசிய கவுன்சில் மீது ரசிகர்கள் கொந்தளிப்பு, காரணம் என்ன

“இலங்கையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 260 – 270 என்ற நல்ல இலக்கை நிர்ணயித்த போது மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக மாறியது. அதனால் அந்தப் போட்டியிலேயே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களுக்கு எதிராக தடுமாறியிருப்பார்கள்” என்று கூறினார். இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள ரிசர்வ் நாளிலும் மழை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement