
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அத்தொடரில் துபாயில் விளையாடும் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து பின்னர் பரம எதிரி பாகிஸ்தானையும் வீழ்த்தி செமி ஃபைனலுக்கு சென்றுள்ளது. இதை அடுத்து இந்தியா தங்களது கடைசி குரூப் சுற்று போட்டியில் வலுவான நியூஸிலாந்தை சந்திக்கிறது.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதிலும் ஆஸ்திரேலியாவில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ந்து அவர் தனது விக்கெட்டை இழந்தது இந்திய ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் சஞ்சய் பங்கருடன் சேர்ந்து ஸ்பெஷல் பயிற்சிகளை மேற்கொண்டார்.
பின்னர் ரஞ்சிக்கோப்பையில் 12 வருடங்கள் கழித்து டெல்லிக்காக களமிறங்கிய விராட் கோலி அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்தார். அடுத்ததாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் சுமாராக விளையாடிய அவர் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் பந்தை பருந்து போல கடைசி வரை பார்த்து அடிப்பதில் விராட் கோலி பயிற்சிகளை எடுத்ததாக சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
அதைப் பின்பற்றி பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய விராட் கோலி இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடும் தகுதியைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பங்கர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி பந்து தம்மிடம் வருவதற்காக காத்திருந்தார்”
“அனைத்து நேரங்களிலும் அவர் முன்னங்காலில் விளையாடவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் தனது இன்னிங்ஸின் முதல் பகுதியில் பெரும்பாலும் பின்னங்காலில் எதிர்கொண்டதை பார்த்தது நன்றாக இருந்தது. அப்படி விளையாடி நான் தன்னம்பிக்கையைப் பெற்றதும் அவர் முன்னோக்கி வந்து பேட்டிங் செய்தார். விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கும் போது அவரது பேட் 2, 3வது ஸ்லிப் பகுதி வரை வரும்”
இதையும் படிங்க: 2019 உ.கோ மாதிரி நினச்சுகிட்டு இங்க வராதீங்க டக்கெட்.. பேஸ்பால் போதும்ன்னு பாருங்க.. இங்கிலாந்தை விளாசிய அஸ்வின்
“அது அவர் கட்டுப்பாட்டுடன் விளையாட உதவும். ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் அசத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அது அவருடைய பாடி லாங்குவேஜில் தெரிந்தது. ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் பந்தை கடைசி வரை பார்த்து அடிப்பதில் அவர் கவனம் செலுத்தினார். பந்தை பருந்து போல பார்த்து ஒவ்வொரு பந்துக்கும் 100% பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் பேசினோம். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அவரால் இன்னும் எளிதாக 3 – 4 வருடங்கள் விளையாட முடியும்” எனக் கூறினார்.