2019 உ.கோ மாதிரி நினச்சுகிட்டு இங்க வராதீங்க டக்கெட்.. பேஸ்பால் போதுமான்னு பாருங்க.. இங்கிலாந்தை விளாசிய அஸ்வின்

R Ashwin
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து குரூப் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக ஆஸ்திரேலியா எதிராக 356 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து தோற்றது. அதை விட கொஞ்சம் சிறிய அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானிடம் 326 ரன்கள் அடிக்க முடியாத இங்கிலாந்து தலை குனியும் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

முன்னதாக இந்தியாவிற்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்றாலும் கவலைப்பட மாட்டோம் என்று இங்கிலாந்து துவக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்தார். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவையே தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக அவர் துச்சமாக பேசினார். கடைசியில் அங்கே இந்தியாவிடம் ஒய்ட்வாஷ் தோல்வியை வாங்கிய இங்கிலாந்து தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

ஆசியா ஈஸி கிடையாது:

இந்நிலையில் 2019 உலகக் கோப்பையை போல வெல்லாமலேயே சாம்பியன்ஸ் டிராபியை தூக்கி விடலாம் என்ற நினைப்புடன் இங்கிலாந்து ஆசிய கண்டத்திற்கு வரக்கூடாது என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பின் கேப்டன்ஷிப் பற்றி சிந்திக்கவில்லை என ஜோஸ் பட்லர் தெரிவித்தார். 2023 உலகக்கோப்பையில் சுமாராக விளையாடிய அவர்கள் சாம்பியன்ஸ் டிராஃபியில் வெளியேறியுள்ளார்கள்”

“ஏற்கனவே 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் அவர்கள் தகுதி பெறவில்லை. எனவே இங்கிலாந்து தங்களது மனதில் குழப்பத்துடன் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான தொடரில் 3 – 0 என்ற கணக்கில் தோற்றாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என்று பென் டக்கெட் கூறினார். இது அவர்களது மனநிலையை காட்டுகிறது. ஐசிசி தொடரில் உங்களாக எளிதாக ஃபைனலுக்கு வந்து வெல்ல முடியுமா?”

- Advertisement -

2019 மாதிரி கிடையாது:

“ஹரி ப்ரூக் தங்களுடைய அடுத்த தலைமுறை நாயகன் என்று இங்கிலாந்தினர் விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் மூழ்கும் வகையில் விளையாடும் அவரும் மேட்ச் வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் அழுத்தத்தை சந்தித்துள்ளார். இந்த பேஸ்பால் தலைமுறையில் இங்கிலாந்து என்ன நடந்தது என்பதை மறுபரிசலனை செய்ய வேண்டும். இந்திய துணைக் கண்டத்தில் நடைபெறும் சுற்றுப்பயணங்களை இங்கிலாந்து சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரவி சாஸ்திரி அற்புதமான கருத்தைத் தெரிவித்தார்”

இதையும் படிங்க: யூனிஸ் கான் பாகிஸ்தானை விட்டுட்டு ஆப்கனுக்கு பயிற்சியாளராக இதான் காரணம்.. பரிதாபத்தை பகிர்ந்த ரசித் லதீப்

“இங்கிலாந்து 2019 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வென்றார்கள். ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பையை வென்றார்கள். உண்மையில் அந்த பெயரை வைத்துக்கொண்டு வெல்லலாம் என்ற நினைப்புடன் அவர்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு வரக்கூடாது. ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற அணிகள் நன்கு தயாராகி இங்கே வருகின்றன. இங்கிலாந்து அதைப்பற்றி சிந்திக்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement