ராகுல் மாதிரி பிளேயர்ஸ் கத்துக்கணும், நாட்டுக்காக தோனி காயத்துடன் விளையாடிய – 2016 பின்னணி பற்றி சஞ்சய் பங்கர் பேட்டி

Sanjay Bangar 3
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காயத்தை சந்தித்து லீக் சுற்றில் விளையாடவில்லை. அதனால் வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் மிகச் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள ராகுல் சூப்பர் 4 சுற்றில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி சமீப காலங்களில் நிறைய நட்சத்திர இந்திய வீரர்கள் லேசான காயத்தை சந்தித்தாலே அதை காரணமாக வைத்து நிறைய போட்டிகளில் விளையாடாமல் இருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

இந்நிலையில் 2016 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்திருந்தும் முக்கியமான போட்டி என்பதால் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி நாட்டுக்காக வலியுடன் விளையாடும் முடிவை எடுத்த பின்னணியை முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பகிர்ந்துள்ளார். அத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக லேசான காயத்தை சந்தித்ததால் தோனி பக்கவாட்டில் நகர முடியாமல் இருந்ததாக சஞ்சய் பங்கார் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனியின் அர்ப்பணிப்பு:
அதனால் விளையாட மாட்டார் என்று கருதப்பட்ட அவர் கேப்டனாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது அவசியம் என்று கருதி காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடியதைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சஞ்சய் பங்கார் பேசியது பின்வருமாறு. “வார்த்தைகளை விட செயல் அதிகமாக பேசும் என்று சொல்வார்கள். அந்த ஆசிய கோப்பையில் தோனி விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று நினைத்தோம். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாட மாட்டார் என்று கருதினோம்”

“ஏனெனில் காயத்தால் அவர் பக்கவாட்டு பகுதியில் நகர முடியாமல் வேகமாக ஓட முடியாமல் தடுமாறினார். இருப்பினும் அவர் இந்திய அணிக்காக களத்தில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக போட்டி துவங்குவதற்கு முன்பாக அவர் பார்க்கில் ஓடி நம்மால் முடிந்த அளவுக்கு பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். இது போன்றவற்றை யாரும் அதிகமாக சொல்லியிருக்க மாட்டார்கள். மேலும் விளையாட்டில் விளையாடும் வீரர்களுக்கு தான் அந்தப் போட்டியின் மதிப்பு தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலக கோப்பையில் தம்முடைய குழந்தை பிறந்த போதும் கேப்டனாக இருந்ததால் நாடு திரும்ப முடியாது என்று தெரிவித்த தோனி தொடர்ந்து விளையாடினார். அந்தளவுக்கு எப்போதுமே தேசப்பற்றுடன் விளையாடிய அவர் அந்தப் போட்டியில் காயத்துடன் விளையாடியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: வீடியோ : முதல் ஓவரிலேயே சரவெடி சிக்ஸர், ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக ஹிட்மேன் ரோஹித் சர்மா தனித்துவ சாதனை

அதனாலேயே தம்முடைய ஓய்வு முடிவை 2020 இந்திய சுதந்திர தினத்தில் அறிவித்த அவர் அவ்வப்போது இந்திய ராணுவத்தில் சென்று பணியாற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் ஐபிஎல் 2023 தொடரில் 41 வயதிலும் லேசான முழங்கால் வலியை கொண்டிருந்தும் தம்முடைய சிறந்த ஃபிட்னஸ் காரணமாக தொடர் முழுவதும் விளையாடி அபாரமாக கேப்டன்ஷிப் செய்த அவர் சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement