இந்த வருஷம் கோப்பை எங்களுக்கே, எல்லாத்தையும் அவங்க 2 பேர் பாத்துக்குங்க – சங்ககாரா மகிழ்ச்சி

sangakaara
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்க உள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. வரும் மே 29-ஆம் தேதி வரை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

Ipl cup

- Advertisement -

அதேபோன்று பைனல் உள்ளிட்ட ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர்கொள்கிறது.

ராஜஸ்தானில் அஷ்வின் – சஹால்:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. குறிப்பாக இந்த தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அதற்காக அனைத்து அணி வீரர்களும் மும்பையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chahal and Ashwin

இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யூஸ்வென்ற சஹால் ஆகியோர் ஒரே ஜோடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாட உள்ளது அந்த அணி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போதைய தேதியில் இந்திய அணியில் டாப் சுழல் பந்து வீச்சாளராக வலம் வரும் இவர்கள் தங்களது அபார திறமையால் சமீப காலங்களில் இந்தியாவின் பல வெற்றிகளின் பங்காற்றி வருகின்றனர்.

- Advertisement -

மகிழ்ச்சியில் சங்கக்காரா:
அதிலும் சமீபத்தில் சொந்த மண்ணில் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த தொடரில் இந்த இருவருமே அபாரமாக செயல்பட்டு நல்ல பார்மில் உள்ளார்கள். அப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த அணியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

sangakaara

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.”லெக் ஸ்பின் மற்றும் ஆஃப் ஸ்பின் ஆகிய சுழல் பந்து வீச்சு அடிப்படையில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த 2 சுழல் பந்துவீச்சாளர்கள் எங்கள் அணியில் விளையாட உள்ளனர். இவர்களுடன் ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, நவதீப் சைனி, கவுன்டர்-நைல், மெக்காய் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எங்கள் பந்துவீச்சு கூட்டணி மிகச் சிறப்பாக உள்ளது.

- Advertisement -

அத்துடன் எங்கள் அணிக்காக ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரால் பேட்டிங் துறையும் வலுவாக உள்ளது. மேலும் ராசி வேன் டேர் டுஷன், ஜிம்மி நீசம், மிட்சேல் ஆகியோர் எங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறார்கள். எனவே எங்கள் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக காட்சியளிக்கிறது” என கூறினார்.

Malinga

பொதுவாகவே ஒரு அணியில் ஒரு நல்ல ஆஃப் ஸ்பின்னர் அல்லது லெக் ஸ்பின்னர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் ராஜஸ்தான் அணியில் அஷ்வின் மற்றும் சஹால் ஆகியோர் இருப்பதால் இரண்டு வகையான சுழல் பந்து வீச்சும் வலுவாக உள்ளது. இதனால் இதர அணிகளை காட்டிலும் ராஜஸ்தான் அணி மிகுந்த பலம்பொருந்திய அணியாக உள்ளது என குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். மேலும் ட்ரெண்ட் போல்ட், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் என அனைத்து துறைகளிலும் தரமான வீரர்கள் இருப்பதால் 2008-க்கு பின் முதல் முறையாக இந்த சீசனில் ராஜஸ்தான் கோப்பையை வெல்வது உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

லசித் மலிங்கா:
இப்படி ஏற்கனவே பலத்துடன் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும் வண்ணமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கையைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவான் லசித் மலிங்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். அதுபற்றி குமார் சங்ககாரா பேசியது பின்வருமாறு.”அனுபவம் வாய்ந்த மதிப்பு மிகுந்தவர்களை சேர்த்து எங்கள் அணியின் மதிப்பை உயர்த்துவதே எனது வேலையாகும். அந்த வகையில் லசித் மலிங்கா மற்றும் பேடி அப்டன் ஆகியோரின் மதிப்பைப் பற்றி அனைவருமே அறிவார்கள். அவர்கள் நாட்டிற்காக மிகச் சிறப்பாக விளையாடிய அனுபவத்தை கொண்டவர்கள். எனவே நீண்ட நாட்களாக ஒரு கோப்பையை வெல்ல வேண்டுமென்ற எங்களின் பயணத்தில் அவர்களின் திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய நேரம் இதுவாகும்” என கூறினார்.

இதையும் படிங்க : என் வீட்டை பார்க்கனுமா? அப்போ கெளம்பி வாங்க – பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த தோனி – எதற்கு தெரியுமா?

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ள ஜாம்பவான் லசித் மலிங்கா கடந்த 2014ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டனாக இருந்தவர். அப்படிப்பட்ட அவர் கடந்த 2009 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி பல சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். அந்த நிலையில் கடந்த வருடம் ஓய்வு பெற்ற அவரை மும்பை அணி நிர்வாகம் தங்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கும் குமார் சங்ககாரா அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட சம்மதிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement