என் வீட்டை பார்க்கனுமா? அப்போ கெளம்பி வாங்க – பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த தோனி – எதற்கு தெரியுமா?

Farm-House
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்காக மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்த ஒரே ஒரு கேப்டன் என்ற மிக பெரிய பெருமையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் இந்த ஆண்டும் சென்னை அணிக்காக தலைமை தாங்கி செயல்பட இருக்கிறார்.

dhoni 2

- Advertisement -

தற்போது சூரத் நகரில் சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் அங்கு இருக்கும் அவர் தற்போது ராஞ்சி நகரில் உள்ள தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் பொதுமக்களுக்கு பார்வையிட அனுமதி தந்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பலரது மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அதற்கான காரணமும் தற்போது தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ராஞ்சி நகரில் நாற்பத்தி மூன்று ஏக்கர் அளவில் பெரிய பண்ணை வீட்டை தோனி வைத்துள்ளார். அவரது பண்ணை வீட்டில் இருக்கும் ஓய்வு நேரங்களில் அவர் வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்.

farm house 1

அதன்படி அவரது தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, பப்பாளி, தர்பூசணி, பட்டாணி குடைமிளகாய், மீன் மற்றும் கோதுமை போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறார். இப்படி தனது மிகப்பெரிய வீட்டில் இதுவரை தனது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே வந்து செல்ல அனுமதித்த தோனி தற்போது பொதுமக்களின் வருகைக்கும் அனுமதி தந்துள்ளார்.

- Advertisement -

இதற்கு காரணம் யாதெனில் தற்போது ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி 17, 18, 19 ஆகிய 3 தேதிகளில் தோனி தன்னுடைய வீட்டை பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு தனது பண்ணை வீட்டுக்கு வரும் மக்கள் தோட்டத்தில் இருந்து எந்த பொருட்களை வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம் என்றும் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தமுறை தான் அவரோட உண்மையான ஆட்டத்தை பாக்கப்போறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதை – மேக்ஸ்வெல் எச்சரிக்கை

இந்த அறிவிப்பு தற்போது மக்களை பெரிதளவு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் பலரும் இதுவரை தோனியின் பண்ணை வீட்டை உள்ளே சென்று கண்டு ரசிக்க முடியாத வேளையில் தற்போது பொது மக்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement