இந்தமுறை தான் அவரோட உண்மையான ஆட்டத்தை பாக்கப்போறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதை – மேக்ஸ்வெல் எச்சரிக்கை

Maxwell
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு இருந்த 8 அணிகளுடன் தற்போது புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இணைந்துள்ளதால் இம்முறை 10 அணிகளுடன் பிரம்மாண்டமாக இந்த தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகள் ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ipl

- Advertisement -

மேலும் 10 அணிகளுக்கான கேப்டன்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் தற்போது எந்த அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. மெகா ஏலம் நடத்தப்பட்டு வீரர்கள் மாற்றப்பட்டுள்ளதால் இம்முறை எந்த அணி பலம் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பெங்களூரு அணி சிறப்பாக செயல்படும் என்றும் அதிலும் குறிப்பாக விராட் கோலி தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என பெங்களூரு அணியின் முன்னணி வீரரான மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை கேப்டனாக பயணித்த விராட் கோலி தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறியுள்ளார்.

Maxwell

அதேபோன்று அந்த அணியின் புதிய கேப்டனாக டூபிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலி குறித்து தற்போது மேக்ஸ்வெல் கூறுகையில் : விராட் கோலி இனிமேல் ஆக்ரோஷமான வீரர் கிடையாது. அவருக்கு பெரிய சுமையாக இருந்த கேப்டன் பொறுப்பை அவர் தற்போது வேறொருவரின் கையில் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் அவரது பணிச்சுமை குறைந்துள்ளது. கேப்டன் என்கிற மிகப்பெரிய அழுத்தத்திலிருந்து அவர் தற்போது வெளியே வந்துள்ளதால் இது எதிரணிக்கு அபாயகரமான செய்தி. இனிமேல் அவர் எவ்வித அழுத்தமின்றி விளையாடப்போகிறார். எனவே மற்ற அணிகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பவுலர்கள் இப்படி பண்றதால எந்த தப்பும் இல்ல. தைரியமா பண்ணுங்க. நியாயம் நம்மபக்கம் இருக்கு – அஷ்வின் குரல்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி தற்போது அனைத்து விதமான கேப்டன் பொறுப்பில் இருந்தும் வெளியே வந்துள்ளதால் அவர் மீது எந்த அழுத்தமும் இருக்காது. இதன் காரணமாக அடுத்து வரும் சில ஆண்டுகள் அவர் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் என்ஜாய் செய்து விளையாட இருக்கிறார் எனவும் மேக்ஸ்வெல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement