பவுலர்கள் இப்படி பண்றதால எந்த தப்பும் இல்ல. தைரியமா பண்ணுங்க. நியாயம் நம்மபக்கம் இருக்கு – அஷ்வின் குரல்

Ashwin
- Advertisement -

காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பல மாற்றங்களை கண்டு வரும் கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளை இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கும் மேர்லிபோன் கிரிக்கெட் கவுன்சில் எனும் எம்சிசி அமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய மன்கட் எனப்படும் எதிர்ப்புறத்தில் இருக்கும் பந்தை எதிர் கொள்ளாத பேட்ஸ்மேனை ஒரு பவுலர் அவுட் செய்யும் முறை பல விவாதங்களை எழுப்பியது.

ICC

- Advertisement -

ஏனெனில் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே அரை இன்ச் காலை வைத்து பந்து வீசினாலும் கூட அதை வீசும் பந்துவீச்சாளர்களுக்கு தண்டனையாக பிரிஹீட் கொடுக்கப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் ஒரு அடி அளவிற்கு தாண்டிச் செல்லும் பேட்ஸ்மேன்கள் பற்றி யாரும் பேசுவது கிடையாது. அதேசமயம் விதிமுறைப்படி அவ்வாறு அவுட் செய்வது சரியானது என்றாலும் அது போன்ற வகையில் அவுட் செய்வது நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் உள்ளதாகவும் விளையாட்டின் நேர்மை தன்மைக்கு எதிராக உள்ளதாகவும் பலரும் விமர்சித்து வந்தார்கள். அந்த நிலையில் விளையாட்டு என்றால் விதிமுறை சமநிலையுடன் இருக்க வேண்டும் என கருதிய எம்சிசி இந்த மன்கட் அவுட் முறையை ரன் அவுட் முறைக்கு மாற்றியமைத்து கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

வெற்றிகண்ட அஷ்வின்:
இந்த அறிவிப்பு தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிடைத்த உண்மையான வெற்றி என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள். ஏனெனில் அவர்தான் கடந்து 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்து உலக அளவில் விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்டார். அந்த சமயத்தில் பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தன்னை திட்டித்தீர்த்த போதும் அதற்கெல்லாம் அசராத அவர் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வகையில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

Ravichandran Ashwin Jos Buttler Mankad

இந்நிலையில் மன்கட் விதிமுறையில் எம்சிசி மாற்றி அமைத்துள்ளது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள விதிமுறை பந்துவீச்சாளர்களை இழிவு படுத்துகிறது. அது பேட்ஸ்மேன்களை அவுட் செய்யுங்கள் என வெளிப்படையாகக் கூறுகிறது. இதன் காரணமாக அந்த வகையில் ஒரு பேட்ஸ்மேனை அவுட் செய்தால் அவர்கள் மனம் உடைந்து போவார்கள் என பல பந்து வீச்சாளர்கள் நினைக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் அவ்வாறு செய்தால் இந்த உலகம் தங்களைப் பற்றி என்ன பேசுமோ என்ற அச்சத்திலேயே அதை செய்வதற்கு பவுலர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் இந்த தருணத்தில் பந்துவீச்சாளர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்”. “பந்தை வீசுவதற்கு முன்பாக ஒரு பேட்ஸ்மேன் நகர்ந்தால் அது உங்களின் கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றி விடும் அல்லது முடித்து விடும். ஏனெனில் எதிர்ப்புறம் இருக்கும் அந்த பேட்ஸ்மேன் அந்த அறைகுறை ரன்னை எடுத்து அடுத்த பந்தை எதிர்கொண்டு அதில் சிக்ஸர் அடிக்கலாம்.

அந்த சிக்ஸர் காரணமாக அடுத்த போட்டியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டால் உங்களின் கிரிக்கெட் வாழ்க்கையே முடியலாம். இதே நீங்கள் அவரை அவுட் செய்தால் உங்களின் வாழ்க்கை காப்பாற்றப்படலாம். அந்த அளவுக்கு இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே யார் என்ன சொல்வார்களோ என பயப்படுவதை விட்டுவிட்டு இந்த புதிய விதிமுறையை தங்களுக்கு சாதகமாக பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும்” என கூறினார்.

- Advertisement -

நியாயம் தானே:
அவர் கூறுவதுபோல சமீப காலங்களாக கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களின் நிலைமை படாதபாடாக உள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஒரு பேட்ஸ்மேன் மோசமாக செயல்பட்டால் அவருக்கு குறைந்தது அடுத்த 5 போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் ஒரு பந்து வீச்சாளர் மோசமாக செயல்பட்டால் அடுத்த ஒரு சில போட்டிகளிலேயே அணியிலிருந்து தூக்கி எறியப்படுவார்கள். அதன் காரணமாக பெரும்பாலான பந்து வீச்சாளர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும் முடியும் அளவுக்கு செல்கிறது.

Ashwin Buttler Mankad

அப்படிப்பட்ட நிலையில் எதிர்புறம் விதிமுறையை மீறி கொண்டு வெள்ளை கோட்டை தாண்டி ரன்கள் எடுத்து அடுத்த பந்தை எதிர்கொள்ளும் திசைக்கு செல்லும் பேட்ஸ்மேன் அடுத்த பந்தில் சிக்சர் அடித்து உங்கள் வாழ்க்கையை முடித்தால் என்ன செய்வீர்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்த உலகம் என்ன சொல்லும் என்பதை மறந்துவிட்டு நியாயம் நம் பக்கம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அதுபோன்ற மன்கட் அவுட் முறையை தைரியமாக செய்யுமாறு உலக அளவில் இருக்கும் அனைத்து பந்துவீச்சாளர்களையும் அஸ்வின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் கூறுவதை அலசி ஆராயும் போது உண்மையாகவே அதில் நியாயம் உள்ளது என்பதுதான் உண்மையாகும். அதன் காரணமாகவே சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் இந்த விதிமுறைக்கு சமீபத்தில் தங்களின் ஆதரவை தெரிவித்தார்கள். மொத்தத்தில் இனிவரும் காலங்களில் அதிக அளவில் மன்கட் வகையிலான ரன் அவுட்களை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement