ரெய்னாவை யாரும் ஏலத்தில் எடுக்காததுக்கு இதுவே காரணம் – தெளிவான விளக்கத்தை கொடுத்த சங்கக்காரா

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 2005-ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் 226 ஒருநாள் போட்டிகள் 78 டி20 போட்டிகள் மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் ரெய்னா பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வந்ததால் முக்கிய வீரராக இந்திய அணியில் இடம் பிடித்து வந்தார்.

Raina

- Advertisement -

இருப்பினும் 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் தோனியுடன் சேர்ந்து அவரும் ஓய்வு முடிவை அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது 35 வயது நிரம்பியுள்ள ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடுவது கிடையாது. ஆனால் அவர் சென்னை அணிக்காக மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார்.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் ரெய்னா சிஎஸ்கே அணியால் மட்டுமின்றி எந்த அணியாலும் வாங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் 2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல் துவங்கியது முதல் மிகச்சிறந்த வீரராக ஐபிஎல் தொடரில் செயல்பட்டுவந்த ரெய்னாவிற்கு சென்னை ரசிகர்கள் மத்தியில் சின்ன தல என்ற பெயரும் உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் எப்போதுமே பேட்டிங்கில் அதிரடி காட்டி சென்னை அணிக்கு முக்கிய பங்கினை ஆற்றி வந்த அவரை சென்னை அணி ஏலத்தில் எடுக்காமல் விட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

raina 1

நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் சென்னை அணி 2.85 கோடி ரூபாய் மீதி தொகை வைத்திருந்தும் அவர்கள் அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய் கொடுத்து அவரை ஏலத்தில் எடுக்காதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை ஏன் எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரெய்னா எந்த அணியாலும் வாங்கப்படாததற்கு பல காரணங்களை கூற முடியும்.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் ரெய்னா ஒரு முக்கியமான வீரர் தான். இப்போதும் அவரின் புகழ் உச்சத்தில் தான் உள்ளது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ரெய்னா ஒரு லெஜன்ட். இருப்பினும் ஆண்டிற்கு ஆண்டு புதிய வீரர்களின் வருகையால் அணியின் எதிர்கால திட்டம் மற்றும் வீரர்களின் பயணம் என்ற எல்லாவற்றையும் யோசித்து பார்க்க வேண்டியுள்ளது. தற்போது முப்பத்தி 55 வயதாகும் ரெய்னா உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது கிடையாது.

இதையும் படிங்க : மும்பை அணி அவரை ஏலத்துல எடுக்காம விட்டது மிகப்பெரிய தவறு – பயிற்சியாளர் ஓபன்டாக்

அதேபோன்று அவரது பார்மும் அவர் விலைபோகாமல் போக ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் எதிர்கால வீரர்களின் வருகையும் இருப்பதனால் இவை அனைத்தையும் கணக்கில் வைத்துதான் ஒரு அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவில்லை. தற்போது 35 வயதாகும் ரெய்னா மோசமான பார்மில் இருப்பதும், கிரிக்கெட் விளையாடி டச்சில் இல்லாததும் மேலும் அவரது பார்ம் அவுட்டும் அவர் விலை போகாததற்கு காரணம் என சங்ககாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement