மும்பை அணி அவரை ஏலத்துல எடுக்காம விட்டது மிகப்பெரிய தவறு – பயிற்சியாளர் ஓபன்டாக்

MI
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் 15-வது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு 8 அணிகளுடன் நடைபெற்ற இத்தொடரானது தற்போது புதிதாக இரண்டு அணிகள் இணைந்துள்ளதால் 10 அணிகளுடன் இந்த சீசனுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடருக்கு முன்னர் அனைத்து அணைகளில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் முறையில் வீரர்கள் வாங்கப்பட்டு தற்போது பத்து அணிகளும் போட்டியில் பங்கேற்க தயாராக இருக்கின்றன.

IPL
IPL Cup

ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தாங்கள் அணியில் தெரிவுசெய்த அணிகளை வீரர்களை அழைத்துக்கொண்டு தற்போது தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கும் மும்பை அணியிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து தற்போது மும்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மும்முரமாக தங்களது வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் இந்த ஏலத்தில் மிக முக்கியமான ஒரு வீரரை தவறவிட்டது குறித்து கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணி இந்த மெகா ஏலத்தில் ஒரு தவறு செய்துவிட்டது. நிச்சயம் அவர்கள் டிரென்ட் போல்ட்டை வாங்கியிருக்க வேண்டும்.

boult

ஏனெனில் பும்ரா மற்றும் போல்ட் ஜோடி கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை அணிக்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று 2020-ஆம் ஆண்டு அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்ற போது அந்த சீசனில் அவர்கள் இருவரும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள். எனவே இன்னும் சில ஆண்டுகள் கூட அவர்கள் இருவரும் இணைந்து பந்து வீசி இருக்கலாம்.

- Advertisement -

ஆனால் தற்போது மும்பை அணி ட்ரென்ட் போல்ட்டை வாங்காமல் தவறு செய்து விட்டது. அதற்கு என்ன காரணம் என்பது எனக்கு புரியவில்லை என்றாலும் அவர்கள் செய்தது தவறுதான் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உணத்கட் மும்பை அணியால் வாங்கப்பட்டாலும் அவரை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க : ஒரு பந்துக்கு கூட ஈடாக மாட்டீங்க – நீங்க இந்தியாவுடன் மோதுறீங்களா ! ரமீஷ் ராஜாவுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

மும்பை அணியில் நிறைய வீரர்கள் இருந்தாலும் அந்த வீரர்களை எவ்வாறு அவர்கள் அணியில் இணைக்க போகிறார்கள் என்றும் எந்த காம்பினேஷனில் அவர்கள் விளையாட போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement