கேப்டனா இருந்தாலும் நிறைய கத்துக்கனும்னு நினைக்குறாரு – இளம் கேப்டனை புகழ்ந்த சங்கக்காரா

Sanga
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சில தினங்களில் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் வெற்றிகரமாக துவங்க உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான முழு அட்டவணையும் வெளியாகி தற்போது அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மீண்டும் புதிதாக வீரர்கள் வாங்கப்பட்டு உள்ளதால் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

ipl

- Advertisement -

அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாகவே கோப்பையை கைப்பற்ற போராடி வரும் ராஜஸ்தான் அணி இம்முறையும் தங்களது தீவிரத்தைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் துவங்கிய 2008-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் அணி அதன் பிறகு இதுவரை தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி மிக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

ஆனாலும் இம்முறை சில பலமான வீரர்களை அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளதால் நிச்சயம் மற்ற அணிகளுக்கு போட்டி தரும் அளவில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான குமார் சங்ககாரா இந்திய அணியின் இளம் வீரரும், ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Samson

டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் சிறந்த வீரர்களில் ஒருவர். கடந்த இரண்டு சீசன்களாகவே அவர் தனது பேட்டிங்கில் சிறப்பான பார்முக்கு வந்துள்ளார். சமீபத்தில் கூட இந்திய அணியில் இடம் பிடித்து அவர் விளையாடி இருந்தார். அவர் ஒரு அற்புதமான வீரர் மேலும் பேட்டிங் செய்யும்போது ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன், அவர் ஒரு மேட்ச் வின்னர் என்று புகழ்ந்து தள்ளினார். மேலும் ஒரு பேட்ஸ்மேனுக்கு தேவையான அனைத்து திறனும் கொண்ட வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார்.

- Advertisement -

அதோடு சஞ்சு சாம்சன் கேப்டனாக நிறைய கற்றுக் கொள்ள நினைக்கிறார். அனைவரையும் மதிக்கிறார் ஒரு கேப்டனாக மாறிய பின்னரும் இன்னும் கற்றுக்கொள்வதில் ஆர்வத்தை காட்டுகிறார். சஞ்சு சாம்சனுக்கு இயற்கையாகவே தலைமை பண்பு இருக்கிறது. நிச்சயம் அவர் சிறப்பான வீரராக மாறுவார் என்று சங்ககாரா புகழ்ந்து பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : தீபக் சாஹருக்கு சரியான மாற்றுவீரர் அவர்தான். எல்லாத்தையும் தோனி பாத்துப்பாரு – இர்பான் பதான் கணிப்பு

சஞ்சு சாம்சன் அனைவரிடமும் இனிமையாகப் பழகக் கூடியவர். ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசினாலும் சிலநேரங்களில் நகைச்சுவையாகவும் பேசுவார். அது எப்போதாவது தான் வெளியே வரும் என்று சஞ்சு சாம்சன் குறித்து சங்ககாரா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement