தீபக் சாஹருக்கு சரியான மாற்றுவீரர் அவர்தான். எல்லாத்தையும் தோனி பாத்துப்பாரு – இர்பான் பதான் கணிப்பு

Pathan
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் 26 ஆம் தேதி துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்காக அனைத்து பணிகளும் தற்போது முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சூரத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சிஎஸ்கே அணியானது இம்முறையும் ஆதிக்கத்தை செலுத்தும் ஒரு அணியாக பார்க்கப்படுகிறது. அதோடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சிஎஸ்கே இம்முறை பல புதிய வீரர்களை அணியில் இணைத்து உள்ளதால் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

csk 1

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தீபக் சாஹர் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேளையில் காயம் காரணமாக அவர் இந்த ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் முதலில் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் வேலையில் தற்போது சிஎஸ்கே அணி மும்முரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் ஷிவம் துபே, ஹங்கரேக்கர், கே.எம்.ஆசிப் போன்ற இளம் வீரர்களை வைத்து அவரது இடத்தை நிரப்ப அணி நிர்வாகம் திட்டம் தீட்டி வருகிறது. இந்நிலையில் தீபக் சாகரின் இடத்தில் எந்த வீரர் களமிறங்கினால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான இர்பான் பதான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Hangargekar 1

சிஎஸ்கே அணியில் தற்போது ஷர்துல் தாகூரும் இல்லை எனவே தீபக் சாகரின் இடத்தை சரியான வீரரைக் கொண்டு நிரப்ப வேண்டும். அந்த வகையில் அவரது இடத்தை நிரப்ப இளம் வீரர் ஹாங்கரேக்கர் சரியாக இருப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் இளம்வீரரான அவர் நிச்சயமாக அந்த இடத்தை பூர்த்தி செய்யும் அளவு தகுதியுடையவர். அவரது திறமை என்ன என்பதை நாம் அண்டர் 19 உலக கோப்பையிலே பார்த்துள்ளோம்.

- Advertisement -

எனவே நிச்சயம் ஹாங்கரேக்கரை தீபக் சாஹர் குணமடைந்து வரும் வரை பயன்படுத்தலாம். இளம் வீரரான அவருக்கு அனுபவம் இல்லையே என்று நினைக்க வேண்டாம் தோனி போன்ற கேப்டன் இருக்கும்போது அந்த அனுபவம் இல்லாத வீரர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டுமோ அப்படி வழி நடத்தி அவரை முதிர்ச்சியான வீரராக மாற்றுவார். எனவே அவரை இறக்கும் போது எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. கேப்டனாக இருக்கும் தோனி அவரை சரியாக வழிநடத்துவார் என்கிற நம்பிக்கை என்னுள் இருக்கிறது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் உச்சத்தில் இருந்த வீரர் இன்னைக்கு குஜராத் அணிக்கு நெட் பவுலரா? – சோகமான வாழ்க்கை

அதேபோன்று தீபக் சாகர் வரும்வரை அவரை விளையாட வைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவரால் மேஜிக் நிகழ்த்த கூட வாய்ப்பு உள்ளது என இர்பான் பதான் கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த அண்டர் 19 உலகக்கோப்பையில் அசத்தலான வேகப்பந்து வீச்சை வெளிப்படுத்தியது மட்டுமன்றி பேட்டிங்கிலும் பின்வரிசையில் களமிறங்கி அதிரடி காட்டியவரான இவரை சென்னை அணி ஏலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement