அடுத்த சீசனில் அந்த பையனை பெரிய வீரராக மாற்றுவேன் – ராஜஸ்தான் கோச் சங்கக்காரா அதிரடி பேட்டி

Sanga
- Advertisement -

இந்தியாவில் 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமானபோது முதல் சீசனில் ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து இதுவரை கோப்பையை வெல்லாமல் இருந்த ராஜஸ்தான் அணியானது இம்முறை சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி குஜராத் அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு சரியான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்து மிக பலம் வாய்ந்த அணியாக ராஜஸ்தான் அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் அதனை தவிர்த்து சரியான கலவையில் வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளதால் நல்ல அணியாகவே அனைத்து அணிகளுக்கு எதிராக சரியான போட்டியைத் அளித்து வந்தது.

GTvsRR

- Advertisement -

ஆனால் இந்த ராஜஸ்தான் அணியில் இளம் வீரரான ரியான் பராக் மைதானத்தில் நடந்து கொள்ளும் விதம் பெரிய விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஏனெனில் அவர் கேட்ச் பிடித்த உடனே பந்தைக் கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரி பார்த்துக் கொள்ளும்படி கிண்டல் செய்வது, பீல்டிங் செய்யும்போது சீனியர் வீரர்கள் இடம் கத்துவது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து சேட்டைகளை செய்து வருகிறார்.

இதன் காரணமாக அவர் மீது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஆனாலும் அவர் தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த சீசனில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 183 ரன்களை மட்டுமே அடித்து இருந்தாலும் தொடர்ச்சியாக ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ரியான் பராக் குறித்து பேசியுள்ள சங்ககாரா கூறுகையில் :

Riyan Parag 56.jpeg

எதிர்வரும் சீசனில் ரியான் பராக்கை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏனெனில் இந்த சீசனில் நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் நிறைய முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். எங்களது அணியின் பேட்டிங் ஆர்டரை எடுத்துக்கொண்டால் பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மையர் போன்றோர் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.

- Advertisement -

ஆனால் அவர்களை தவிர்த்து பெரிய அளவில் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் ரன் குவிக்கவில்லை. குறிப்பாக இந்த தொடரில் இளம் வீரர்கள் பராக் மற்றும் படிக்கல் ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அவர்களது சப்போர்ட் போதுமான அளவில் இல்லை. இன்னும் மிடில் ஆர்டரில் சப்போர்ட் ரோல் பிளேயர்களிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு தேவை என்று நினைக்கிறேன். அந்த வகையில் இனி ரியான் பேட்டில் இருந்தும் பெரிய அளவிலான ரன்கள் வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இன்னும் 2 வருஷத்துக்குள்ள இந்திய அணிக்கு புது கேப்டன் தேவைப்பட்டா இவரை போடுங்க – மைக்கல் வாகன் கருத்து

அவரிடம் அபரிமிதமான திறமை இருக்கிறது. அதனை பேட்டிங்கில் ரன் எண்ணிக்கையாக கொண்டு வர வேண்டும். வெறும் டெத் ஓவரில் விளையாடும் வீரராக மட்டும் இல்லாமல் அவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றுவதற்கு எதிர்நோக்கி உள்ளேன். வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டையும் அவர் சரியாக கையாள்வதால் நிச்சயம் அடுத்த சீசனில் அவரை பெரிய வீரராக மாற்ற இருப்பதாக சங்கக்காரா பேட்டியளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement