இன்னும் 2 வருஷத்துக்குள்ள இந்திய அணிக்கு புது கேப்டன் தேவைப்பட்டா இவரை போடுங்க – மைக்கல் வாகன் கருத்து

Vaughan
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது நேற்று முன்தினம் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 130 ரன்களை மட்டுமே அடித்தது.

RRvsGT-1

அதனைத் தொடர்ந்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது சுப்மன் கில், பாண்டியா மற்றும் மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாண்டியா, பேட்டிங்கிலும் 34 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணி தங்களது அறிமுக தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனையும் படைத்தது. இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு இந்த சீசன் முழுவதுமே அவர் குஜராத் அணியை சிறப்பாக வழி நடத்தி வந்துள்ளார். குறிப்பாக லீக் சுற்றுப் போட்டியில் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர்கள் 10 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினை உறுதி செய்தனர்.

tweet

அதேபோன்று முதலாவது குவாலிபயர் போட்டியிலும் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது மட்டுமின்றி இறுதிப் போட்டியிலும் அவர்களை வீழ்த்தி குஜராத் அணி தங்களை ஒரு மிகவும் பலம் வாய்ந்த அணியாக நிரூபித்துள்ளனர். இப்படி குஜராத் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு அந்த அணியின் கேப்டன் பாண்டியா முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய கேப்டன் தேவைப்பட்டால் நிச்சயம் ஹர்திக் பாண்டியாவைத்தான் பரிந்துரைப்பேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : அறிமுக சீசனிலேயே மிக அருமையான சாதனையை குஜராத் அணி செய்துள்ளது.

இதையும் படிங்க : ஹார்திக் பாண்டியாவின் இந்த செயலால் தேர்வுக்குழுவினர் நிச்சயம் ஹேப்பியா இருப்பாங்க – கவாஸ்கர் புகழாரம்

இன்னும் ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் ஹார்டிக் பாண்டியாவை தாண்டி வேறு யாரையும் பரிந்துரைக்க மாட்டேன். மிகவும் அருமையான வெற்றி குஜராத் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சீசன் முழுவதும் அற்புதமாக விளையாடிய பாண்டியா பேட்டிங்கில் 487 ரன்களையும், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement