IPL 2023 : 10 டீம்ல ஒரு டீம் கூட என்னை எடுக்கல. என்னோட மனசே ஒடஞ்சிப்போச்சி – ஆதங்கத்தை பகிர்ந்த இந்திய வீரர்

Sandeep-Sharma
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டு 16-வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது கடந்த 23-ஆம் தேதி கொச்சியில் வீரர்களுக்கான மினி ஏலமும் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் சாம் கரன் 18.50 கோடிக்கு ஏலத்தில் அதிக விலைக்கு சென்றார்.

Auction

- Advertisement -

அதேபோன்று ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் க்ரீன், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் போன்றோர் பெரிய விலைக்கு ஏலம் போனார்கள். ஆனால் அதேவேளையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இந்திய வீரர்கள் சிலர் இம்முறை யாராலும் கண்டுகொள்ளப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரும் தன்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக மனமுடைந்து வருத்தமான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் 29 வயதான சந்தீப் ஷர்மா இந்த ஐபிஎல் ஏலத்தில் தன்னை யாரும் ஏலத்தில் எடுக்காதது வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.

Sandeep-1

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த முறை நான் ஏலத்தில் விலை போகாதது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது, அதோடு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. நான் எந்த அணிக்காக விளையாடினாலும் மிகச் சிறப்பாக செயல்படுவேன். ஆனால் இந்த முறை நான் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாதது என் மனதையே நொறுக்கியுள்ளது.

- Advertisement -

இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நடைபெற்று முடிந்த உள்ளூர் தொடர்களில் கூட நான் சிறப்பாக செயல்பட்டும் என்னை யாரும் தேர்வு செய்யவில்லை என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 50 லட்ச ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட சந்தீப் சர்மாவை எந்த அணியும் வாங்காதது உண்மையிலேயே வருத்தமான ஒன்றுதான்.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் உலக சாதனையை சமன் செய்த – டேவிட் வார்னர்

ஏனெனில் இதுவரை 104 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 114 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு பவர்பிளே ஓவர்களிலேயே இவர் பந்தினை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்து விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement