யாரோட இடத்தையும் ஆக்கிரமிக்கல, அவர் தேர்வானது இந்தியாவின் ஆசிர்வாதம்.. சந்தீப் பாட்டில் ஆதரவு

Sandeep Patil
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி 2011 போல கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக இந்த அணியில் கடைசி நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது. ஏனெனில் 2017க்குப்பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரும்பாலும் கழற்றி விடப்பட்டு வரும் அவர் 2022 ஜனவரிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால் இந்த வாய்ப்பு அசாத்தியமாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்தியாவின் ஆசிர்வாதம்:
இருப்பினும் குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய அக்சர் பட்டேலுக்கு பதிலாக எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க வேண்டும் என்பதற்காக அஸ்வின் தேர்வாகியுள்ளார். ஆனாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்கள் சஹால் இடத்தை கடைசி நேரத்தில் அஸ்வின் ஆக்கிரமித்து விட்டதாக விமர்சித்தனர்.

இந்நிலையில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று 1983 உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் சந்திப் பாட்டீல் தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகின் சிறந்த ஸ்பின்னராக இருக்கும் அஸ்வின் கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்டது இந்தியாவின் ஆசிர்வாதம் என்று பாராட்டும் அவர் இது பற்றி டெலிகிராப் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதில் எவ்விதமான ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னராக இருக்கும் அவர் இந்திய அணியில் வந்துள்ளதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்”

- Advertisement -

“அதே சமயம் காயத்தை சந்தித்து வெளியேறிய அக்சருக்காக நான் வருத்தமடைகிறேன். ஆனால் இது தான் இந்தியாவுக்கு மாறுவேடத்தில் கிடைத்த ஆசீர்வாதம் என்பதை நீங்கள் உணர வேண்டும். மேலும் தற்போதைய அணி நன்றாகவும் சமநிலை மற்றும் ஃபார்ம் கொண்டதாகவும் இருப்பது முக்கியமாகும். இருப்பினும் இந்த தொடரின் பாதியில் தான் அனைத்து அணிகளும் எங்கு இருக்கின்றன என்பதை நம்மால் உறுதியாக தெரிந்து கொள்ள முடியும்”

இதையும் படிங்க: 2023 உ.கோ ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி அவங்க தான் ஜெய்ப்பாங்க.. கில்கிறிஸ்ட் கடைசிநேர அதிரடி கணிப்பு

“மேலும் சொந்த மண்ணில் விளையாடும் போது இருக்கும் சாதகத்தை சமாளிப்பது ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் இருக்கிறது. எனவே அவர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். 1983 உலகக்கோப்பை வெற்றியில் நிறைய ஆல் ரவுண்டர்கள் ஹீரோக்களாக முக்கிய பங்காற்றினர். எனவே ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட வேலைகளில் சிறப்பாக செயல்பட்டால் அது வெற்றியை கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement