2023 உ.கோ ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி அவங்க தான் ஜெய்ப்பாங்க.. கில்கிறிஸ்ட் கடைசிநேர அதிரடி கணிப்பு

Adam Gilchrist 3
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி 2023 உலகக்கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக வரலாற்றில் முதல் முறையாக இந்திய மண்ணில் முழுவதுமாக ஐசிசி நடத்தும் இத்தொடரில் டாப் 10 அணிகள் நவம்பர் 19ஆம் தேதி வரை மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வலுவான ஆஸ்திரேலியா போன்ற உலக அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சொல்லப்போனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்திய அணியினர் களமிறங்குகின்றனர்.

- Advertisement -

கில்கிறிஸ்ட் கணிப்பு:
அதற்கேற்றார் போல் 2023 ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்ற இந்திய அணி சமீபத்திய ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. மேலும் ரோகித் சர்மா, கில் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் ராகுல், பும்ரா போன்ற காயத்தை சந்தித்த வீரர்கள் குணமடைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது இந்திய அணியை வலுப்படுத்துகிறது.

அதன் காரணமாக இந்தியாவை தோற்கடித்து விட்டு தான் உலகின் மற்ற அணிகள் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று ஏராளமான முன்னாள் வீரர்கள் கடந்த ஒரு மாதமாக கணித்து வருகிறார்கள். இந்நிலையில் 2023 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கு இந்தியா வரும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் ஃபைனலில் நிச்சயமாக இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று அதிரடியான கணிப்பை நேற்று மதியம் கடைசி நேரத்தில் வெளியிட்டுள்ள அவர் இது பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “ஆடவர் உலகக்கோப்பை துவங்கும் மாலை அன்று அனைத்து அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக்கோப்பையில் எனக்கு நிறைய மலரும் நினைவுகள் இருக்கின்றது”

இதையும் படிங்க: எல்லாரும் சச்சினாக முடியாது.. நாட்டுக்காக அதை மட்டும் செய்ங்க போதும் – கோலியை விமர்சித்த ஹர்பஜன்

“என்னைப் பொறுத்த வரை இந்த உலகக் கோப்பையில் இந்தியாவை ஃபைனலில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும். உங்களுடைய கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன” என்று கலகலப்புடன் கூறியுள்ளார். அவர் கூறுவது போல ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா ஐசிசி தொடர்களில் எப்போதுமே கில்லியாக செயல்பட்டு வருகிறது. அதனால் இந்தியா உலகக்கோப்பை வெல்ல வேண்டுமெனில் முதலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என்று கௌதம் கம்பீரும் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement