எல்லாரும் சச்சினாக முடியாது.. நாட்டுக்காக அதை மட்டும் செய்ங்க போதும் – கோலியை விமர்சித்த ஹர்பஜன்

harbhajan Singh 6
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சி போட்டிகள் நிறைவு பெற்று கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்று அனைத்து அணிகளும் கோப்பை வெல்வதற்காக தயாராகியுள்ளன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக 2011 உலகக் கோப்பையை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கைகளில் எப்படியாவது வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் யுவராஜ் சிங் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் அபாரமாக சிறப்பாக விளையாடி சாதித்து காட்டினர். ஏனெனில் 16 வயதில் அறிமுகமாகி உலகின் அனைத்து பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் அதற்கு முந்தைய 5 உலகக் கோப்பைகளிலும் தோல்விகளையே சந்தித்தார்.

- Advertisement -

ஹர்பஜன் விமர்சனம்:
இருப்பினும் 24 வருடங்களாக இந்தியாவின் பேட்டிங்கை தம்முடைய தோள் மீது சுமந்த சச்சினை கௌரவப்படுத்துவதற்காக சொந்த மண்ணில் கோப்பையை வென்றதும் இந்திய வீரர்கள் தங்கள் தோளில் சுமந்து மைதானத்தை வளம் வந்தது மறக்க முடியாததாக அமைந்தது. அந்த நிலையில் தற்போது 25000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சச்சினுக்கு நிகரான அந்தஸ்தை கொண்டுள்ள விராட் கோலிக்காக முறை இந்திய வீரர்கள் உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா போன்ற சில முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக சச்சின் போலவே இம்முறை விராட் கோலியை இந்திய வீரர்கள் கோப்பையை வென்றதும் தோளில் சுமந்து மைதானத்தில் வலம் பெறுவதை பார்க்க விரும்புவதாக சேவாக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைவராலும் சச்சினாக முடியாது என்று மறைமுகமாக விமர்சித்துள்ள ஹர்பஜன் சிங் ஒருவருக்காக கோப்பையில் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லாமல் இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுங்கள் என இந்திய அணியை கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2011 மற்றும் 2023 அணிகளுக்கிடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. 2011 அணி மிகவும் ஒற்றுமையாக இருந்தது. அதில் அனைவரும் சச்சினுக்காக வெல்ல விரும்பினார்கள். இருப்பினும் தற்போதைய அணியை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சச்சினுக்கு நிகரான மரியாதையை இந்த அணியில் யாராவது கொண்டிருக்கிறார்களா என்பது எனக்கு சந்தேகமாகும்”

இதையும் படிங்க: ENG vs NZ : முதல் போட்டியில் நட்சத்திர வீரர் விளையாடுவது சந்தேகம் – இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

“எனவே அனைத்து வீரர்களும் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். என்னைப் போலவே நீங்களும் தனி நபருக்காக அல்லாமல் இந்தியாவுக்காக விளையாடுங்கள். அதனால் நாம் இந்தியா வெல்ல வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். விராட் கோலி அல்லது டிராவிட் வெல்ல வேண்டும் என்று வேண்டக்கூடாது” என கூறினார்.

Advertisement