ENG vs NZ : முதல் போட்டியில் நட்சத்திர வீரர் விளையாடுவது சந்தேகம் – இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Ben-Stokes
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ஐசிசி-யின் 13-வது உலகக்கோப்பை தொடரானது கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை காண நேரில் குவிவார்கள் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைக் தொட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முன்னெச்சரிக்கை காரணமாக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

அதேபோன்று தற்போது இங்கிலாந்து அணியிலும் முக்கிய வீரர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியிலேயே அந்த பின்னடைவு சந்திக்கும் என்று தெரிகிறது. அந்தவகையில் இங்கிலாந்து அணி பயிற்சி போட்டிகளில் விளையாடி இருந்தாலும் அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அந்த பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவில்லை.

பயிற்சி போட்டியில் விளையாடி அவரது காயம் மேலும் தீவிரமடைந்தால் அது எதிர்வரும் தொடரில் பாதகமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக விளையாடவில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இந்த உலககோப்பை தொடரின் முதல் போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் முழு உடற்தகுதி அடைந்தால் மட்டுமே அவர் விளையாடுவார் என்றும் அப்படி போட்டிக்கு முன்னர் அவர் ஃபிட்டாக இல்லை என்றால் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் அண்மையில் ஆகஸ்ட் மாதம் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 182 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : CWC23 : போட்டிகளை நடத்தும் இந்தியா ஏன் முதல் போட்டியில் ஆடல தெரியுமா? – பின்னால் இருக்கும் காரணம்?

அவரது கம்பேக் இங்கிலாந்து அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படும் வேளையில் இந்த முதல் போட்டியில் அவர் ஒருவேளை விளையாடாமல் போனால் அது இங்கிலாந்து அணிக்கு பாதகத்தை தரலாம். அதோடு இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே அவர் விளையாடுவார் என்றும் பந்துவீச வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது. இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் ஸ்டோக்ஸ் அதற்கான சிகிச்சையும் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement