CWC23 : போட்டிகளை நடத்தும் இந்தியா ஏன் முதல் போட்டியில் ஆடல தெரியுமா? – பின்னால் இருக்கும் காரணம்?

IND-vs-AUS
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. அதன்படி இன்று அக்டோபர் 5-ஆம் தேதி கோலாகலமாக துவங்க இருக்கும் இந்த தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 48 போட்டிகள் இந்தியாவில் உள்ள 10 வெவ்வேறு மைதானங்களில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக காத்திருக்கின்றனர்.

இம்முறை உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் இந்திய அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இன்றைய முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. பொதுவாகவே எந்த நாடு உலககோப்பை தொடரை நடத்துகிறதோ அந்த அணிதான் முதல் லீக் போட்டியில் விளையாடுவது வழக்கம்.

- Advertisement -

குறிப்பாக 2003-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உலக கோப்பை நடைபெற்ற போது தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தான் முதல் போட்டியில் மோதின. அதேபோன்று 2007-ஆம் ஆண்டு போட்டிகள் மே.இ தீவுகள் நாட்டில் நடைபெற்றதால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் முதலில் மோதின. அதனை தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்ற போது இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் தான் முதலில் மோதின.

அதேபோன்று 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆஸ்திரேலியா நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றதால் அந்த இரு அணிகளும் தான் முதல் போட்டியில் மோதினர். ஏன் கடைசியாக 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலக கோப்பை நடந்த போது இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தான் முதலில் விளையாடியது. இப்படி எந்த நாடுகள் உலகக்கோப்பை தொடரினை நடத்துகிறதோ அந்த நாடுதான் முதல் லீக் போட்டியில் மற்றொரு அணியுடன் முதல் போட்டியில் பங்கேற்கும்.

- Advertisement -

ஆனால் இம்முறை இந்தியாவில் உலககோப்பை போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளே முதல் போட்டியில் விளையாடுகின்றன. இப்படி ஏன் முதல் ஆட்டத்தில் இந்தியா விளையாடவில்லை? என்பதற்கு மறைமுகமாக ஒரு காரணமும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணியின் படி அக்டோபர் 5-ஆம் தேதியான இன்று வியாழக்கிழமை என்பதால் பெரிய அளவில் ரசிகர்கள் போட்டியை பார்ப்பார்களா என்பது உறுதி கிடையாது.

இதையும் படிங்க : வேலை வாங்குவத்தில் கில்லாடி.. அவர் வெறும் கேப்டன் இல்ல, கிரிக்கெட்டின் டைரக்டர்.. அஸ்வின் பாராட்டு

அதேவேளையில் நாளுக்கு நாள் போட்டி சூடு பிடிக்க ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அந்த வகையில் எப்பொழுதுமே வார கடைசி நாட்களில் இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெற்றால் காசினை வாரி குவிக்கலாம் என்கிற காரணத்தினால் பிசிசிஐ அக்டோபர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியை வைத்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இம்முறை இந்தியா முதல் லீக் போட்டியில் விளையாடவில்லை என்றும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement