வேலை வாங்குவத்தில் கில்லாடி.. அவர் வெறும் கேப்டன் இல்ல, கிரிக்கெட்டின் டைரக்டர்.. அஸ்வின் பாராட்டு

Ravichandran Ashwin 2
- Advertisement -

நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வரலாறு கண்ட மிகச்சிறந்த புதிய கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். மின்னல் வேகத்தில் விக்கெட் ஸ்டம்பிங் செய்து விக்கெட் கீப்பிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வதில் கில்லாடி இருந்தாலும் கேப்டனாகவே அனைவராலும் அதிகமாக கொண்டாடப்படுகிறார்.

ஏனெனில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போது 2007 டி20 உலகக் கோப்பையில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய அவர் ஃபைனலில் ஜோகிந்தர் சர்மாவை பயன்படுத்தியது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதே போல் 2010இல் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியாவை முன்னேற்றிய அவர் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் 2011 உலகக் கோப்பையை வென்று காட்டினார்.

- Advertisement -

கிரிக்கெட்டின் டைரக்டர்:
அதே போல தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, தவான் போன்ற இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்ற அவர் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலககோப்பைகளை முத்தமிட்ட ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்தார். அத்துடன் வருங்காலத்திற்காக சேவாக், கம்பீர் போன்றவர்களை கழற்றி விட்டு இப்போதுள்ள வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்த அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்தார் என்று சொல்லலாம்.

மேலும் 2010 ஐபிஎல் ஃபைனலில் நேராக ஃபீல்டரை வைத்து பொல்லார்ட்டை அவுட்டாக்கிய தோனி ஓய்வு பெற்றதும் எப்படி ஃபீல்டிங் பற்றி புதிய புத்தகம் எழுத வேண்டும் என அவரை வளர்த்த சௌரவ் கங்குலி பாராட்டியிருந்தார். அந்தளவுக்கு எதிரணி பேட்ஸ்மேன்களை சரியான இடத்தில் ஃபீல்டர்களை நிற்க வைத்து அவுட்டாக்குவதிலும் வல்லவரான தோனியை கேப்டனாக செயல்படுவதற்காகவே பிறந்தவர் என்றும் கங்குலி ஒருமுறை பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் திரைப்படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் செதுக்குவது போல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரர்களின் திறமையை அறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து வெளிக்கொண்டு வருவதில் வல்லவரான தோனி டைரக்டர் என்று வளர்க்கப்பட்ட ஒருரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின் வருமாறு. “தோனியை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா”

இதையும் படிங்க: எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க.. அவர மாதிரி சுயநலமற்றவர பாக்கவே முடியாது – அஸ்வின் பாராட்டு

“தோனி கேப்டன் அல்ல ஒரு டைரக்டர். சொல்லப்போனால் திரைப்பட இயக்குனரை போல அவர் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த டைரக்டர். பொதுவாக திரைப்பட இயக்குனர் என்ன செய்வார்கள்? ஒரு கேரக்டரை உருவாக்கி அதன் குணத்தை வெளிப்படுத்துவார்கள் அல்லவா. அதே போல தோனியும் தன்னுடைய தலையில் வீரர்களை கேரக்டராக தேர்வு செய்கிறார். அந்த கேரக்டருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல் போல் சரியான சூழ்நிலையை கொடுத்து விளையாட வைத்து வெற்றி காண்கிறார்” என்று கூறினார்.

Advertisement