எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க.. அவர மாதிரி சுயநலமற்றவர பாக்கவே முடியாது – அஸ்வின் பாராட்டு

Gautam Gambhir Ashwin
- Advertisement -

நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவின் உலகக்கோப்பை நாயகர்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார். டெல்லியை சேர்ந்த அவர் இடது கை துவக்க வீரராக அதிரடியாக விளையாடி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2007 டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்கள் அடித்த அவர் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதை விட 2011 உலகக்கோப்பை ஃபைனலில் இலங்கைக்கு எதிராக ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறிய போது நங்கூரமாக நின்று சட்டையில் தாய்மண் ஒட்டும் அளவுக்கு அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 97 ரன்கள் அடித்த அவர் 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோனி தலைமையில் கோப்பையை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் அந்த 2 முக்கிய போட்டிகளிலுமே அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
அதை விட ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலியை அடிக்கடி விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் பெரிய ரசிகர்களுக்கு பிடிக்காதவராகவே அறியப்படுகிறார். இந்நிலையில் கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்களால் புரிந்து கொள்ளப்படாத வீரர் என்று ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார்.

அதை விட அணியின் நலனுக்காக சொந்த செயல்பாடுகளைப் பற்றி பார்க்காமல் விளையாடக்கூடிய கம்பீர் சுயநலமற்ற வீரர் என்றும் பாராட்டும் அஸ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் இந்தியாவில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத வீரர். குறிப்பாக வெற்றிக்காக எதிரணியுடன் சண்டை போடுவதில் அவர் மகத்தான அணியின் வீரர். அதை அதிகம் வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர் உங்களுடைய முகத்தில் சவாலாக இருப்பார்”

- Advertisement -

“மேலும் கோப்பை ஃபைனலில் மட்டும் அவர் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடவில்லை. அதற்கு முன்பே நிறைய இன்னிங்ஸ் விளையாடி இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றிய கம்பீர் கொண்டாடப்படாத ஹீரோ ஆவார். குறிப்பாக அவர் அழுத்தம் எங்களை தொடுவதற்கு அனுமதிக்காமல் விளையாடிய சுயநலமற்றவர். அதிலும் 120 – 130* ரன்கள் எடுத்திருந்தால் கூட அவரை நான் சுயநலமற்றவர் என்று சொல்வேன்”

இதையும் படிங்க: கில், பும்ராவுக்கு இல்ல.. 2 இந்தியர் இருக்காங்க.. நாசர் ஹுசைனின் 2023 உ.கோ அல்டிமேட் பிளேயிங் லெவன் இதோ

“அவர் அப்போட்டியை வெற்றிகரமாக முடிக்க விரும்பினார். எனவே அவர் மீது எப்போதுமே எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. இருப்பினும் அனைவரும் அவருக்கு தகுதியான பெரிய பாராட்டுகளில் குறைவானவற்றையே கொடுக்கின்றனர்” என்று கூறினார். முன்னதாக 2011 உலகக்கோப்பை வெற்றியை தாம் அல்லது தோனி பெற்று கொடுக்கவில்லை அனைவரும் சேர்ந்தே வென்றோம் என கம்பீர் அடிக்கடி சுயநலமின்றி கூறுவதை வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement