கில், பும்ராவுக்கு இல்ல.. 2 இந்தியர் இருக்காங்க.. நாசர் ஹுசைனின் 2023 உ.கோ அல்டிமேட் பிளேயிங் லெவன் இதோ

Nasser Hussain 3
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக தயாராக இருக்கின்றன. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு வழக்கம் போல அனைவரிடமும் காணப்படுகிறது.

அதில் ரோகித் சர்மா தலைமையில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் சொந்த மண்ணில் கில்லியாகவும் செயல்படக்கூடிய இந்தியா 2011 போல கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்களை எடுக்கப் போவது யார் என்ற கணிப்புகளை பல முன்னாள் வீரர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

ஹுசைன் அணி:
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையில் அனைத்து அணிகளிலும் தரமாக இருக்கக்கூடிய வீரர்களை வைத்து ஒரு கனவு அல்டிமேட் அணியை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியாவிலிருந்து பேட்டிங் துறையில் தற்போது உச்சகட்ட ஃபார்மில் சுப்மன் கில்லை தேர்வு செய்யாத அவர் பவுலிங் துறையின் கருப்பு குதிரையாக கருதப்படும் பும்ராவையும் கண்டு கொள்ளவில்லை.

இருப்பினும் நவீன கிரிக்கெட்டின் நாயகர்களாக கொண்டாடப்படும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியிலிருந்து துவங்கும் போது நான் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுப்பேன். 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்”

- Advertisement -

“இந்த அணியில் என்னுடைய வைல்ட் கார்ட் தேர்வாக விராட் கோலி இருப்பார். ஏனெனில் பல வீரர்களுக்கு மத்தியில் விராட் மற்றும் ரோகித் ஆகிய இருவரையும் ஒன்றாக எப்படி கொண்டு வரலாம் என்பதை நான் முயற்சித்தேன். அதனால் நீங்கள் கொடுத்த வைல்ட் கார்ட் தேவை பயன்படுத்தி விராட் கோலியை நான் தேர்ந்தெடுக்கிறேன். மேலும் பேட்டிங்கில் குறைபாடு ஏற்பட விரும்பாத நான் மிடில் ஆடரில் நிறைய ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று கூறினார்.

2023 உலகக்கோப்பைகான நாசர் ஹுசைனின் அல்டிமேட் 11 பேர் கனவு அணி இதோ: ரோகித் சர்மா, குவிண்டன் டீ காக், பாபர் அசாம், விராட் கோலி, ஜோஸ் பட்லர் (கேப்டன்), சாகிப் அல் ஹசன், பஸ் டீ லீடி, ரஷித் கான், பட் கமின்ஸ், ட்ரெண்ட் போல்ட், மஹீஸ் தீக்சனா

Advertisement