IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் பாண்டியாவோடு சேர்த்து அவருக்கும் ஓய்வு – அப்போ கேப்டன் யாரு?

Hardik Pandya
- Advertisement -

இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரானது முடிவடைந்த கையோடு அடுத்ததாக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

Ashwin

- Advertisement -

இப்படி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் இந்திய அணியானது அடுத்ததாக இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

அதன்படி இந்த அயர்லாந்து டி20 தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ள ஹார்டிக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sanju-Samson

ஏனெனில் இந்திய அணி அடுத்தடுத்து ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பை என அடுத்தடுத்து பெரிய தொடர்களில் பங்கேற்க இருப்பதினால் அந்த முதன்மை அணியில் விளையாடும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கும் வகையில் ஏற்கனவே சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இந்த அயர்லாந்து தொடருக்கான அணியில் சுப்மன் கில் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் பாண்டியா மற்றும் கில் ஆகிய இருவருக்கும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அயர்லாந்து டி20 தொடருக்கான அணி முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் வீக்னெஸ் அது தான், அதுல அட்டாக் பண்ணா ஈஸியா அவுட்டாக்கலாம் – ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

அதோடு அந்த அணிக்கு சஞ்சு சாம்சன் அல்லது சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்திய அணி அறிவிக்கப்படும்போது தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement