ஜெய்ஸ்வால் வீக்னெஸ் அது தான், அதுல அட்டாக் பண்ணா ஈஸியா அவுட்டாக்கலாம் – ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஜூலை 20ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் முடிவில் 288/4 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் முதல் முறையாக வாய்ப்பு பெற்ற யசஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகப் போட்டியிலே சதமடித்த 17வது இந்திய வீரர் மற்றும் வெளிநாட்டு மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் (171) ஆகிய சாதனைகளை படைத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

கடந்த 2020 அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவர் ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகி ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் ரஞ்சி, சயீத் முஷ்டாக், விஜய் ஹசாரே ஆகிய 3 வகையான இந்திய உள்ளூர் தொடர்களிலும் சதங்களை அடித்து அபாரமாக செயல்பட்டு வந்தார். அதன் உச்சமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் (625) மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் ஆகிய இரட்டை சாதனைகளை படைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் வீக்னெஸ்:
அதில் ஆரம்பத்திலேயே சதமடித்து நிறைய சாதனைகளை படைத்து பாராட்டுகளைப் பெற்று அவர் 2வது போட்டியிலும் 57 ரன்கள் குவித்து தம்முடைய கேரியரை அட்டகாசமாக துவங்கியுள்ளார் என்றே சொல்லலாம். மேலும் டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை வம்படியாக சென்று கவர் ட்ரைவ் அடிக்க முயற்சித்து எட்ஜ் கொடுத்து ஆட்டமிழப்பது வழக்கமாகும்.

ஆனால் அதை செய்யாமல் பெரும்பாலும் ஃபுல், ஹூக் போன்ற ஷாட்களை அதிகமாக அடிப்பதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் விளையாட தயாராகியுள்ள ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக நீண்ட காலம் அச்சத்துவார் என்று முன்னாள் வீரர் இஷாந்த் சர்மா பாராட்டினார். இந்நிலையில் அவுட் சைட் ஆஃப் பந்துகளை தவற விட்டாலும் முழுவதுமாக தன்னுடைய உடலுக்கு வெளியே வரும் ஃபுல் லென்த் பந்துகளை அடிக்கும் போது ஜெய்ஸ்வால் தடுமாறுவதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதுவே அவருடைய பலவீனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக முதல் போட்டியில் 171 ரன்கள் அடித்த பின் அதே போல அவுட்டான ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் வெளியே வந்த ஃபுல் லென்த் பந்தை பவுண்டரியாக அடிக்க முயற்சித்து டீப் கல்லி திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்படி அடுத்தடுத்த போட்டிகளில் அந்த வகையான பந்தில் அவுட்டானதால் இனிமேல் அவருக்கு எதிராக அதே போன்ற பந்துகளை அதிகமாக வீசி காலி செய்ய எதிரணி பவுலர்கள் முயற்சிப்பார்கள் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

எனவே ஆரம்ப நிலையில் மட்டுமே இருக்கும் ஜெய்ஸ்வால் விரைவில் இந்த பிரச்சனை சரி செய்வார் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “யசஸ்வி நன்றாகவே பேட்டிங் செய்தார். இந்த இன்னிங்ஸில் சற்று அவர் அதிரடியாக விளையாட முயற்சித்தார். அந்த வகையில் டெஸ்ட் போன்ற வெவ்வேறு விதமான கிரிக்கெட்டுக்கு அவர் தன்னை நன்றாக மாற்றிக் கொள்கிறார். ஆனால் அவரிடம் ஒரு கவலையளிக்கும் விஷயம் இருக்கிறது. அதாவது முழுவதுமாக வெளியே நகரும் பந்து அவரை அதிகமாக தடுமாற்றமடைய வைக்கிறது”

இதையும் படிங்க:Ashes 2023 : எழுந்திருக்க முடியாத அளவுக்கு உலக சாம்பியனை அடித்த இங்கிலாந்து, தலைகீழாக மாறி திணறும் ஆஸி – வெல்லப்போவது யார்

“இருப்பினும் இது பெரிய பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே 171 ரன்கள் அடித்துள்ள அவர் இந்த போட்டியிலும் அரை சதம் அடித்துள்ளார். எனவே பொதுவாக தன்னுடைய பலத்திற்கு தகுந்தார் போல் அவர் விளையாடுவார். இருப்பினும் இனிமேல் அந்த வகையான பந்துகளையே அவருக்கு எதிராக எதிரணி பவுலர்கள் அதிகமாக பிரயோகிப்பார்கள். ஆனாலும் அதை திறம்பட எதிர்கொள்வதற்கு அவரும் தயாராகி விடுவார் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement