
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 311-6 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 57, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 19 வயதாகும் இளம் வீரர் ஷாம் கோன்ஸ்டஸ் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் நம்பர் ஒன் பவுலராக கருதப்படும் பும்ராவுக்கு எதிராக அவர் ஒரே ஓவரில் 18 ரன்கள் குவித்தார்.
அதனால் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்காக இரண்டாவது மிகவும் இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். முன்னதாக அந்தப் போட்டியில் 10வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டஸ் எதிர்ப்புறம் பேட்டிங் செய்வதற்காக சென்றார்.
மறுபுறம் பந்தை கையிலெடுத்துக் கொண்டு வந்த விராட் கோலி அவருடைய தோளில் இடித்தார். அப்போது ஏன் எனது வழியில் குறுக்கே வந்தீர்கள் என்ற வகையில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தியதால் மேற்கொண்டு பெரிய சச்சரவுகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் அந்த இடத்தில் விராட் கோலி வேண்டுமென்றே அவர் மீது மோதியதாக அறிவித்துள்ள விராட் கோலி அதற்கு 20% போட்டி சம்பளம் அபராதமாக விதித்துள்ளது. இந்நிலையில் போட்டி பரபரப்பில் விராட் கோலி எதிர்பாராத விதமாக அவ்வாறு தம் மீது மோதியதாக சாம் கோன்ஸ்டஸ் கூறியுள்ளார். மாறாக விராட் கோலி வேண்டுமென்றே தன் மீதும் மோதவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: சுப்மன் கில் நீக்கப்பட்டது ஏன்? ரோஹித் சர்மா ஓப்பனிங்கில் களமிறங்குகிறாரா? அபிஷேக் நாயர் பேட்டி
“நான் என்னுடைய கையுறைகளை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அவர் எதிர்பாராத விதமாக என் மீது மோதினார். கிரிக்கெட்டில் பரபரப்பான சூழ்நிலையில் அவ்வாறு நடக்கும். அதனால் எங்கள் இருவரிடமும் உணர்ச்சிகள் இருந்தது என்று நினைக்கிறேன். கையுறைகளை மாட்டிக் கொண்டிருந்த நான் அவ்வாறு நடந்ததை உணரவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இவ்வாறு நடப்பது சகஜம்” என்று கூறினார்.