- Advertisement -
ஐ.பி.எல்

263 ரன்கள் என்கிற பெரிய இலக்கினை எட்டி நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – சாம் கரன் மகிழ்ச்சி

கொல்கத்தா நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது கொல்கத்தா அணியை அதன் சொந்த மைதானத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர்களான பிலிப் சால்ட் 75 ரன்களையும், சுனில் நரேன் 71 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 262 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக பேர்ஸ்டோ 108 ரன்களையும், ஷஷாங்க் சிங் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிகச்சிறப்பானது. அதிலும் குறிப்பாக இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு கிடைத்துள்ள புள்ளிகள் மிகவும் முக்கியமானவை.

- Advertisement -

கடந்த சில வாரங்கள் எங்களுக்கு கடினமான கால கட்டமாகவே இருந்து வந்தது. ஆனாலும் எங்களது அணியின் வீரர்கள் சரியான முறையில் பயிற்சியினை மேற்கொண்டு, நம்பிக்கையை இழக்காமல் இந்த போட்டியில் வெற்றியை தேடித்தந்துள்ளனர். இந்த மைதானம் அளவில் சிறியதாக இருந்ததாலும், டியூ இருந்ததாலும் எங்களால் இலக்கை நோக்கி வேகமாக செல்ல முடிந்தது.

இதையும் படிங்க : தொப்பி நம்பரை பாத்துருக்கீங்களா.. லக்னோவுக்காக நான் விளையாட காரணமே தல தோனி தான்.. ராகுல் பேட்டி

ஜானி பேர்ஸ்டோவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அதேபோன்று இந்த தொடரில் ஷஷாங்க் சிங் நாங்கள் கண்டறிந்த மிகச்சிறந்த வீரராக திகழ்கிறார். அதேபோன்று அஷுதோஷ் சர்மாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மொத்தத்தில் எங்களது அணியின் வீரர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது என சாம் கரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -