ஐ.பி.எல் தொடரிலிருந்து திடீரென வெளியேறிய சாம் கரன். உலகக்கோப்பையிலும் ஆடமாட்டாராம் – காரணம் இதுதான்

curran 1
- Advertisement -

சென்னை ரசிகர்களின் மத்தியில் “சுட்டிகுழந்தை” என்று செல்லமாக அழைக்கப்படும் சாம் கரன் தனது சிறப்பான பந்துவீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங் மூலம் ஏற்கனவே சென்னை அணியின் ரசிகர்களை கவர்ந்தவர் என்றே கூறலாம். ஐபிஎல் தொடரில் முதல் சில சீசன்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் சென்னை அணிக்கு வந்ததிலிருந்து தோனியின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

curran 1

- Advertisement -

மேலும் தான் சிஎஸ்கே அணியில் விளையாடியதை தொடர்ந்து மேலும் முதிர்ச்சியான வீரராக மாறியுள்ளதாக சாம் கரனே சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் இருந்து தான் விலகுவதாக சாம் கரன் திடீரென அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு காரணம் யாதெனில் :

முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தான் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகப் போவதாகவும் அதுமட்டுமின்றி எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதுகுறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

curran

சாம் கரன் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று உறுதி செய்தது. அதே வேளையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வெளியான தகவலின் படி : சாம் கரன் தற்போது முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்து திரும்பி அங்கு ஸ்கேன் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

sam curran

அந்த ஸ்கேன் முடிவுகளுக்குப் பிறகு காயத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சாம் கரன் உலகக்கோப்பை அணியில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக அவருடைய சகோதரர் டாம் கரன் அணியில் இணைவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கடவுளே சி.எஸ்.கே ஜெயிக்கனும். பரபரப்பான நேரத்தில் பிராத்தனை செய்த தோனியின் மகள் – க்யூட் மொமன்ட்

இந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது பாதியில் சாம் கரன் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் நிச்சயம் பிளேஆப் போன்ற முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் அவர் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் பிராவோ இனி வரும் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement