சி.எஸ்.கே அணியில் விளையாட ஆசைதான். ஆனால் நான் விலகியதற்கு இதுதான் காரணம் – சாம் கரன் பேட்டி

curran 1
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சென்னை சிஎஸ்கே அணியாது மும்பை அணிக்கு அடுத்து அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணியாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கொல்கத்தா அணியை அபாரமாக வீழ்த்தி நடப்புச் சாம்பியனாகவும் இருந்து வருகிறது.

csk 1

- Advertisement -

அப்படி கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரனும் ஒரு அங்கமாக இருந்தார் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய திறன் உடைய சாம் கரன் சிஎஸ்கே அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் அதனைத் தொடர்ந்து அவர் இந்த ஆண்டும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரால் இந்த தொடரில் இணைய முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் தான் விளையாட முடியாமல் போனது குறித்து அவர் பேசுகையில் :

curran 1

நான் சற்று தீவிரமாக உழைத்து இருந்தால் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்க முடியும் ஆனால் என்னை மென்மேலும் நான் வருத்திக் கொள்ள விரும்பவில்லை. அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் நான் சற்று முன்கூட்டியே விளையாட வந்து மேலும் காயம் அடைவதை காட்டிலும் தற்போது ஓய்வில் இருப்பது நல்லது.

- Advertisement -

அதோடு வீட்டிலேயே இருந்து ஐபிஎல் பார்ப்பது வெறுப்பாக உள்ளது. நான் சென்னை அணியில் இருந்திருக்கவேண்டும் ஏலத்தில் எனது பெயரை பதிவு செய்த நினைத்தேன். ஆனால் காயம் காரணமாக இங்கிலாந்து வாரியம் என்னை ஏலத்தில் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாகவே நான் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியுடன் இணையவில்லை.

இதையும் படிங்க : க்னோ அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணியில் நிகழவுள்ள 2 மாற்றம் – ஜடேஜா முடிவு

இருந்தாலும் தற்போது நான் வலைப்பயிற்சியில் மெல்லமெல்ல பந்துவீசி வருகிறேன். நிச்சயம் இனிவரும் சீசன்களில் நான் சென்னை அணியில் விளையாடுவதை தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று சாம் கரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement