லக்னோ அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணியில் நிகழவுள்ள 2 மாற்றம் – ஜடேஜா முடிவு

Jadeja-1
- Advertisement -

கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது முதல் வாரத்தில் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் சரி சமமான பலத்துடன் காணப்படுவதால் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லப்போகும் அணி எது என்பது குறித்தும், இறுதிப்போட்டியில் விளையாட போகும் அணி குறித்துமான எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவி வருகிறது.

CSK vs LSG

- Advertisement -

இந்நிலையில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சில விமர்சனங்களையும் சி.எஸ்.கே அணி பெற்றது.

ஏனெனில் தோனி தலைமையிலான சென்னை அணி எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் ஜடேஜா தலைமையில் முதல் போட்டியிலேயே சி.எஸ்.கே அணி தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக சென்னை அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் இன்று லக்னோ அணிக்கெதிராக நடைபெறவுள்ள போட்டியில் சிஎஸ்கே அணியில் குறிப்பிட்ட இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வெளிநாட்டு வீரரான மொயின் அலி அணியில் இணைந்துள்ளதால் மிட்சல் சான்ட்னர் அணியில் இருந்து வெளியேறுவது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

அதே போன்று முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சோபிக்க தவறிய ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ராஜ்வர்தன் ஹங்கரேக்கருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : லோ ஸ்கோர் திரில்லர் : ஆர்சிபிக்கு பினிஷிங் செய்த தமிழக வீரர், தமிழகத்தின் தோனி என பாராட்டு

இதன் காரணமாக இன்றைய சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றங்கள் நிகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) டேவான் கான்வே, 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) மொயின் அலி, 4) அம்பதி ராயுடு, 5) ராபின் உத்தப்பா, 6) ஜடேஜா, 7) தோனி, 8) பிராவோ, 9) ஹங்கரேக்கர், 10) துஷார் பாண்டே, 11) ஆடம் மில்னே

Advertisement