லோ ஸ்கோர் திரில்லர் : ஆர்சிபிக்கு பினிஷிங் செய்த தமிழக வீரர், தமிழகத்தின் தோனி என பாராட்டு

- Advertisement -

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 30-ஆம் தேதி நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர் வெங்கடேச ஐயர் 10 ரன்களில் அவுட்டாக மற்றொரு அஜிங்கியா ரஹானே 9 ரன்களில் நடையை கட்டினார். இதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய கொல்கத்தா அணியை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

KKR vs RCB Hasaranga

- Advertisement -

பெங்களூரு மாஸ் பவுலிங்:
அடுத்து வந்த நித்தீஷ் ராணா 10 ரன்கள், சுனில் நரேன் 12 ரன்கள், சாம் பில்லிங்ஸ் 14 ரன்கள் என மிடில் ஆர்டர் வீரர்கள் பெங்களூருவின் அதிரடியான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் நடையை கட்ட அடுத்து வந்த விக்கெட் கீப்பர் செல்டன் ஜாக்சன் கோல்டன் டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தார். இதனால் 67/6 என தடுமாறிய கொல்கத்தா அணி 100 ரன்களைக் கூட தொடாது என எதிர்பார்த்த வேளையில் களமிறங்கிய அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் வெறும் 18 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு 25 ரன்களைக் குவித்து ஓரளவு மானத்தைக் காப்பாற்றினார்.

இறுதியில் உமேஷ் யாதவ் அதிரடியாக 18 (12) ரன்களை எடுக்க 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய வணிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுக்களையும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதற்கு முந்தைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 205 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் ரன்களை வாரி வழங்கிய பெங்களூர் பவுலர்கள் இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

KKR vs RCB2

லோ ஸ்கோர் த்ரில்லர்:
இதை தொடர்ந்து 129 என்ற சுலபமான இலக்கை துரத்திய பெங்களூரு எளிதாக வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு போட்டியில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. ஏனெனில் பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அனுஜ் ராவத் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக 2 ஓவரில் கேப்டன் டு பிளசிஸ் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதைவிட 3-வது ஓவரின் முதல் பந்திலேயே 7 பந்துகளில் 2 பவுண்டரி உட்பட 12 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விராட் கோலி அவுட்டாகி மேலும் அதிர்ச்சி அளித்தார். இதனால் 17/3 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற பெங்களூரு மீண்டும் தோல்வியை நோக்கி சென்றது.

- Advertisement -

அந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய வெளிநாட்டு வீரர்கள் டேவிட் வில்லி 28 பந்துகளை சந்தித்து 18 ரன்களும் ருதர்போர்ட் 40 பந்துகளை சந்தித்து 28 ரன்களும் எடுத்து விக்கெட்டுகளை விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அதன்பின் களமிறங்கிய சபாஷ் அகமது வெறும் 20 பந்துகளில் முக்கியமான 27 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த வணிந்து ஹஸரங்கா 4 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பான நேரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த ஹர்ஷல் படேல் 6 பந்துகளில் 2 பவுண்டரி உட்பட முக்கியமான 10 ரன்களை சேர்த்தார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது ஆண்ட்ரே ரசல் வீசிய முதல் பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2-வது பந்தில் பவுண்டரி அடித்து பெங்களூர் அணிக்கு அபார பினிஷிங் கொடுத்தார்.

dk

தமிழகத்தின் தோனி:
இதன் காரணமாக 19.2 ஓவர்களில் 132/7 ரன்களை எடுத்த பெங்களூரு 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மிரட்டிய டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். மொத்தத்தில் குறைந்த ரன்கள் அடிக்க பட்டாலும் கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடந்த இந்த போட்டி ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரில் விருந்து படைத்தது என்றே கூறலாம்.

- Advertisement -

கொல்கத்தாவுக்கு எதிரான இப்போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக பினிஷிங் செய்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களூருவுக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இது பற்றி பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. “மிக குறைந்த ஸ்கோர் என்றாலும் இதில் பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாகும். போட்டியின் ஆரம்ப கட்டத்தில் பந்து ஸ்விங் ஆனது. 2 – 3 நாட்கள் முன்பு இதே மைதானத்தில் 200 ரன்கள் அடிக்கப்பட்டது இன்று 130 மட்டுமே ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான அனுபவமாகும். கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் ஐஸ் கூலாக இருப்பதில் கிட்டதட்ட எம்எஸ் தோனியை போல் இருக்கிறார்” என பாராட்டினார்.

இதையும் படிங்க : மொய்ன் அலி வருகையால் 2-வது போட்டியில் மீண்டெழுமா சிஎஸ்கே – இன்றைய போட்டிக்கான அணி இதோ

ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்காக விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக் கடந்த 2018 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக நடந்த நிதஹாஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சிக்ஸர் அடுத்து இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுத்ததை யாரும் மறக்க முடியாது. அதேபோல ஐபிஎல் தொடரிலும் செயல்பட்டு வரும் அவர் இந்தியா மற்றும் சென்னையின் மகத்தான ஜாம்பவான் பினிசர் எம்எஸ் தோனியை போல் செயல்படுகிறார் என டு பிளேஸிஸ் வெளிப்படையாகப் பாராட்டினார்.

Advertisement